பார்வையில்
சிலோனின் முப்பாடல்
23 January 202611 February 2026

‘சிலோனின் முப்பாடல்’ கண்காட்சியில், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ‘The Song of Ceylon’ (1934) என்ற ஒரு பிரச்சாரத் திரைப்படமே தொடக்கப் புள்ளியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்குப் பிந்தைய தசாப்தங்களில், இரு கலைஞர்கள் இப் படத்தை இரு வேறு தனித்துவமான கோணங்களில் நோக்கி, அதற்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கிய இரண்டு பாடல்களையும் இக் கண்காட்சி ஆராய்கிறது.
இம் மூன்று சிலோன் பாடல்களையும் இக் கண்காட்சி ஒவ்வொன்றாக, தற்காலக் கலைஞர்களின் அண்மைய கானொளிகளுடன் இணைத்து சித்தரிக்கின்றது. இதன் மூலம், கானொளி என்ற ஊடகத்தினால் கதைகள் எவ்வாறு எடுத்துச் சொல்லப்படுகின்றன, மீளச் சொல்லப்படுகின்றன, மற்றும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன என்பவற்றை இக் கண்காட்சி ஆராய்கின்றது.
தினல் சஜீவா மற்றும் நிமாயா ஹரிஸ் ஆகியோரது உதவியுடன் சந்தேவ் ஹண்டி எடுத்தாளும் இக் கண்காட்சியில் பானி அபிடி (பி.1971), பசில் ரைற் (1907–1987), இமாட் மஜீத் (பி.1991), ஜோன் கிரியசன் (பி.1897–1972), லலீன் ஜயமன்ன (பி.1947), லயனல் வென்ற் (பி.1900–1944), மாக் லாபோ (1952–2005), ரோசாலிண்ட் நஷாஷிபி (பி.1973), ஷாரிகா நவமணி (பி.1990), மற்றும் வால்டர் லே (1905–1942) ஆகியோரது படைப்புகள் இடம்பெறுகின்றன.
Art Exchange: Moving Image நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சிலோன் முப்பாடல்’ வழங்கப்படுகிறது. இந் நிகழ்ச்சித்திட்டம் பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆதரவுடன் LUX மற்றும் தெற்காசியக் கலை செயற்திட்டத்தால் (Art South Asia Project) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுசரணையாளர்கள் பார்க் ஸ்ட்ரீட் மியூஸ், இலங்கை கெத் நிறுவனம், ஃபுல்பிரைட் இலங்கை மற்றும் இலங்கை ஆய்வுகளுக்கான அமெரிக்க நிறுவனம். MMCA இலங்கை அதன் முக்கிய பயனாளியான ஜான் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் MMCA இலங்கை நிறுவன புரவலர்கள் ஆகியோரால் ஆதரிக்கப்படுகிறது.
Related Programs
Online
Onsite
விரிவுரை
பவானி ஃபொன்சேகாவுடன் ‘போட்டியிடும் நிலங்கள்: உரிமை, தொழில் மற்றும் இன்றைய பாரம்பரியம்’
Learn MoreFor Kids
For Educators
பயிற்சிப்பட்டறை
கியவண முத்தர உடன் ‘மினெட்டின் முத்திரையை உருவாக்கல்’ (18 வயதிற்கு மேற்பட்டோர்)
Learn Moreபயிற்சிப்பட்டறை
ஷேனுக்கா கொரையாவுடன் ‘காமிக் வரைதல் மற்றும் கதை உள்ள’ (வயதிற்கு மேற்பட்டோர்)
Learn Moreபயிற்சிப்பட்டறை
ஸைனப் ஹுதா உடன் ‘Zine உருவாக்கமும் கலை இதழிலும்’ (16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு)
Learn MoreUpcoming Programmes
May 24
விரிவுரை
பவானி ஃபொன்சேகாவுடன் ‘போட்டியிடும் நிலங்கள்: உரிமை, தொழில் மற்றும் இன்றைய பாரம்பரியம்’
Learn MoreSupport Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us