விரைவில்
டிசம்பர் 2022
தலைப்பு: 2023–2025ம் ஆண்டுகளுக்கு CIMAM இன் தலைவராக சுஹன்யா ரஃபெல் நியமிக்கப்பட்டார்
M+ இன் இயக்குனரான சுஹன்யா ராஃபெல் அவர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நவீன கலை தொகுப்புகளுக்கான சர்வதேச குழுவின் (CIMAM) 2023–2025ம் ஆண்டுகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் ஹொங் கொங் இலுள்ள M+ எனும் காட்சி கலை அருங்காட்சியகத்தை ரஃபெல் நடத்தியுள்ளார். இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் (MMCA இலங்கை) நிறுவனக் குழு உறுப்பினராகவும் ரஃபெல் பணி புரிந்துள்ளார்.
ரஃபெல் தனது நியமனத்தைப்பற்றி பேசுகையில், “CIMAMஇன் அடுத்த தலைவராக பணியாற்றுவதை ஒரு பெருமையாகக் கருதுகிறேன். எமது நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியக சமூகமானது, சிக்கலான மற்றும் சவாலான ஒரு உலகத்தை எதிர்கொள்கிறது. இவ்வேளையில், எனது சக குழு உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இச்சமூகத்துக்குப் பங்களிக்க நான் உற்சாகமாக உள்ளேன்,” எனக் குறிப்பிட்டார்.
“கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக கொந்தளிப்புகள் மற்றும் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன; அத்துடன் உலகளாவிய கோவிட் -19 தொற்றுநோயினால் எமது சமூகங்கள் மேலும் பிரிக்கப்பட்டுள்ளன,” என்றும் ரஃபெல் விபரித்தார். இச்சூழலில் மக்களை ஒன்றிணைப்பதற்கு எங்கள் அருங்காட்சியகங்கள் வகிக்கும் பங்களிப்பானது ஒரு அவசர தேவையாக மாறியுள்ளது. இப்பங்களிப்பில் கலைஞர்கள் தமது படைப்புகளில் வழங்கும் கண்ணோட்டம், அவசியமான நுண்ணறிவு, மற்றும் முன்னோக்கு ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன.
– முடிவு–
டிசம்பர் 2022
தலைப்பு: நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்துடன் இணைந்து ‘சந்திப்புகள்’ கண்காட்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்கிறது.
பெப்ரவரி 2022, ஐரோப்பிய ஒன்றியம் (EU) நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் (MMCA இலங்கை) இணைந்து, அதன் இரண்டாம் கண்காட்சியான, பெப்ரவரி 11, 2022ல் திறந்து வைக்கப்பட்ட ‘சந்திப்புகள்’ கண்காட்சிக்கு ஆதரவளிக்கின்றது.
MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுனரான ஷர்மினி பெரெய்ரா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை பற்றிக்கூறிய நேரம் கூறியதாவது, “ஐரோப்பிய ஒன்றியம் ‘சந்திப்புகள்’ கண்காட்சிக்கு ஆதரவளித்ததால், எம்மால் ஆறு மாதங்களுக்கு பொது மக்களுக்கான இலவச நிகழ்ச்சிகளை நடாத்த முடிந்தது. பல நிகழ்ச்சிகள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மக்கள் மிகக் கடினமான பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைக்கு எதிராக நடாத்திய அரங்கலய (போராட்டம்) காலத்தில் வழங்கப்பட்டது.” MMCA இலங்கைக்கு நாட்டின் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் பல விருந்தினர்கள் வருகை தந்தனர். விருந்தினர்களின் எண்ணிக்கையை பற்றி பெரெய்ரா கூறிய பொழுது, “புதிர் நாட்கள், கலந்துரையாடல் சார்ந்த நாட்களில் நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமான விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர். இதனூடாக எம்மைப் போன்ற அருங்காட்சியங்கள் பொது மக்களுக்கான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடிகின்றது.”
இம் மானியத்தினூடாக, ஐரோப்பிய ஒன்றியம் 1,087 பங்குபெற்றாளர்களை உள்ளடக்கிய 61 இலவச பொது நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளித்தது. இவற்றுள் 11 பயிற்சிப்பட்டறைகளின் மூலமாக பங்குபெற்றாளர்களுக்கு, கலைப்படைப்புகளினூடாக நேரிடையான ஊடாட்டத்தை ஒழுங்கு செய்ய முடிந்தது. “இப் பயிற்சிப்பட்டறைகள், கண்காட்சியுடன் தொடர்புபட்ட விடயங்களை மையப்படுத்தி, பங்குபெற்றாளர்களுக்கு முத்திரைகள் மூலமாக வரலாற்றை கற்றல், கதைசொல்லல், தாவரம் வரைதல், பார்ப்பதினூடாக எழுதுதல், தையல் மற்றும் அலங்காரத்தையல், ஒரிகாமி, சூழலுடன் இசைந்து வாழ்தல் என வெவ்வேறு விடயங்களை உள்ளடக்கியது.” என MMCA இலங்கையின் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளின் துணை எடுத்தாளுனர் பிரமோதா வீரசேகர குறிப்பிடுகிறார். இப் பயிற்சிப்பட்டறைகளில் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி வீரசேகர கூறியதாவது, “பங்குபெற்றாளர்கள் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி சூழலில் இக் கற்றல் அனுபவங்களை பெற்றுக்கொண்டார்கள்.” பயிற்சிப்பட்டறைகளிலிருந்து புதிய விடயங்களைப் பற்றிய அறிவை மட்டுமல்லாது, இலங்கையின் நவீன மற்றும் சமகால கலைகளில் மீள் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தையும் எடுத்து செல்வார்கள் என நம்புகிறோம்.”
‘சந்திப்புகள்’ கண்காட்சியின் ஒவ்வொரு புதிய சுழற்சிக்கு முன்னர், MMCA இலங்கை அருங்காட்சியகத்துடன் தொடர்புபட்ட கல்வியாளர்களுக்கு தனிப்பட்ட பார்வையை ஒழுங்கு செய்தனர். MMCA இலங்கையின் கல்விசார் நடவடிக்கைகளை ஊக்குவிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவால் ஒழுங்கு செய்யப்பட்ட மேலும் ஓர் முன்னெடுப்பாகும் இதுவாகும். ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 1 மற்றும் 2ற்கு முதல், 10 பெப்ரவரி மற்றும் 22 ஜூன், 2022 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட தனிப்பட்ட பார்வைக்கு 34 ஆசிரியர்கள் வருகை தந்திருந்தனர். “கல்வியை மையமாகக் கொண்ட அருங்காட்சியமானதால், விருந்தினர்களுக்கு கற்றல் அனுபவங்களை அளிப்பதற்கு நாம் முன்னுரிமை அளிப்போம்,” எனக்கூறியன் வீரசேகர, மேலும் கூறியதாவது, “ஆகையால், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நிகழ்ச்சிகளுக்கான தொடர்ச்சியான ஆதரவிற்கு நாம் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளோம்.”
MMCA இலங்கை, பொது நிகழ்ச்சிகளை வெவ்வேறு பின்னணிகளைக்கொண்ட ஓவியர்கள், கட்டிட கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் மேலும் பலரைக் கொண்டு நடாத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மானியம், 103 வழிநடத்துபவர்களைக்கொண்டு பயிற்சிப்பட்டறைகள், கேலரி உரையாடல்கள் மற்றும் மேல பொது நிகழ்ச்சிகளை செயல்படுத்த வழிவகுத்தது. மேலும், இம் மானியம் அருங்காட்சியகத்திற்கு 25 வருகைக் கல்வியாளர்களை பணிக்கமர்த்த வழிவகுத்தது. விருந்தினர்களுக்கும், கண்காட்சிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் இடையே முதலாவதாக அருங்காட்சியகத்தை பிரதிநிதிப்படுத்தி செயல்படுபவர்கள் வருகைக் கல்வியாளர்கள்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அரசியல், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளின் சர்வதேச உறவுகள் அதிகாரி ஆன் வோகியர்-சேட்டர்ஜீ இக் கூட்டணியைப்பற்றி கூறியதாவது, “MMCA இலங்கை மற்றும் அதன் தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரெய்ராவின் புதிய முன்னெடுப்புக்கு ஆதரவு வழங்கியதில் ஐரோப்பிய ஒன்றியம் பெரு மகிழ்ச்சியடைகின்றது. கடந்த காலத்தின் களஞ்சியமாக அருங்காட்சியகங்கள் செயல்பட்டாலும், அருங்காட்சியகங்கள் வாழ்க்கை அனுபவங்களை கொண்டிருக்கும் தளங்களாகவும் செயல்பட வேண்டும். இதை ‘சந்திப்புகள்’ கண்காட்சி வெற்றிகரமாக செயல்படுத்தியது.” கண்காட்சியின் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றி வோகியர்-சேட்டர்ஜீ குறிப்பிட்டதாவது, “‘சந்திப்புகள்’ நாட்டின் நவீன மற்றும் சமகால கலையைப் பார்வையிட புதிய வழியை உருவாக்கிய அதே வேளையில், சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திகள் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. அருங்காட்சியகம் மென்மேலும் பல்வேறுபட்ட இளம் மற்றும் முதுமையான, எல்லா வர்க்க, கலாசார மக்களையும் உள்ளடக்கும் இடமாக விளங்கும் என நம்புகிறோம்.”
நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.mmca-srilanka.org நாடுங்கள் அல்லது முகப்புத்தகத்தில் facebook.com/mmcasrilanka அல்லது இன்ஸ்டாக்ராமில் instagram.com/mmcasrilanka/ தொடருங்கள்.
– முடிவு–
டிசம்பர் 2022
தலைப்பு: நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 3 தொடங்குகின்றது.
நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை) கண்காட்சியின் சுழற்சி 3 டிசம்பர் 8ம் திகதி 2022 காட்சிப்படுத்துகின்றது. பொதுமக்கள் இக் கண்காட்சியை மார்ச் 19ம் திகதி 2023 வரை கிரேஸ்கட் பூல்வார்ட், கொழும்பில் அமைந்திருக்கும் அருங்காட்சியக வளாகத்தில் காணலாம். MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுனர், ஷர்மினி பெரெய்ரா மற்றும் எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டியால் எடுத்தாளுமை செய்யப்பட, ‘சந்திப்புகள்’ கண்காட்சி, பெப்ரவரி 11, 2022 தொடங்கப்பட்டு மார்ச் 19, 2022 நிறைவுபெறும். கண்காட்சிக்கான உள்நுழைவு இலவசம்.
‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சில் மூன்றில், ஏ.மார்க் (1933–2000), ஜார்ஜ் கீற் (1901–1993), ஹரஸ்கம (b. 1959), மற்றும் ஜனனி குரே (b. 1974) ஆகியோரின் படைப்புகளை உள்ளடக்கிய இரண்டு புதிய கண்காட்சி கூடங்களை உள்ளடக்கியுள்ளது. இவை ஆடைகளை, குறிப்பாக அவை எவ்வாறு செயல்பாட்டைத்தவிர, வர்க்கம், தொழில், பால்நிலை மற்றும் தேசிய அடையாளத்தைப் பற்றிய தகவல்களைக் குறிக்கின்றது என்பதை காட்சிப்படுத்துகின்றன. இக் காட்சியில் ஜார்ஜ் கீற்றின் ‘Kandyan Bride’ (1951) ஓவியமும் ஜனனி குரேயின் ‘Osariya’ (2015) எனும் ஆற்றுக்கலையில் அவர் அணிந்திருந்த கம்பியால் உருவாக்கப்பட்ட ஆடையையும் ஒப்பீடு செய்கையில் வெளிப்படும் முரணை காணலாம். இவ்விரு படைப்புகளும் ஆடைகளுக்கு சமூக அடையாளத்துக்கு இடையேயான தொடர்பை வெளிக்கொணர்வதுடன், பார்வையாளர்களுக்கு கண்டியில் கட்டப்படும் சேலை முறை அல்லது ‘ஒசரியவை’ இலங்கையில் வெவ்வேறு விதமாக நோக்கும் விதங்களை ஆராய வழிவகுக்கின்றது.
“இக் காட்சியில் ஜார்ஜ் கீற்றின் ஓவியங்களிலுள்ள அரசியல் தொனியை முக்கியமாக அவர் பெண்களை காட்சிப்படுத்திய விதத்தை நாம் மீள் பரிசீலிக்க உதவும் என நம்புகிறேன். அண்மையில் அரசாங்க பெண் உத்தியோகத்தர்களின் ஆடைகளைப் பற்றிய பொதுமக்களின் எதிர்ப்பை , கீற்றின் ஓவியத்தை மறு பரிசீலனை செய்வதூடாகவும், தேசிய அடையாளத்திற்கு ஆடைகளின் பங்கினை கேள்வியெழுப்பவும் உதவும்,” என ஹண்டி குறிப்பிடுகின்றார்.
டிசம்பர் 8 திறக்கப்படவுள்ள இரண்டாவது புதிய காட்சியும் ஜார்ஜ் கீற்றின் ஓவியத்தின் தாக்கத்தால் அமைக்கப்பட்டதாகும். ஆனால் இது ஆன்மிகம் சார்ந்த தலைப்பை கொண்டமைந்துள்ளது. இதில், ஜார்ஜ் கீற்றின் 1949ம் ஆண்டு தீட்டப்பட்ட ‘The Offering’ எனும் ஓவியமானது மேலும் மூன்று ஓவியங்களுடன் சிலுவையில் அறையும் காட்சியை சித்தரிக்கின்றது. இக் காட்சியில் சிலுவையில் அறையும் காட்சியை சித்தரிக்கும் நெலுன் ஹரஸ்கம மற்றும் ஏ. மார்க்கின் படைப்புகளும், ஜார்ஜ் கீற்றின் படைப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுனர் பெரெய்ரா கூறியதாவது, “சிலுவையில் அறையப்படுவதை சித்தரிக்கும் ஓவியங்களில் ஜார்ஜ் கீற்றின் ‘The Offering’உடன் இரு சமகால கலைஞர்களின் படைப்புக்களை ஒன்றாக காட்சிப்படுத்தும் பொழுது ஏற்படும் எண்ணங்களை உருவாக்குவதே ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் நோக்கமாகும். இலங்கையில் முதன்முறையாக ஜார்ஜ் கீற்றின் தனி ஓவியங்களை காட்சிப்படுத்தும் ‘சந்திப்புகள்’ கண்காட்சியினூடக, கீற்றின் ஓவியங்களை பார்வையிடாமல் கூறப்படும்காலம் கடந்த கலை வரலாறு அல்லது ‘கலைத்திறனாய்வுடைமையை’ பற்றிய எண்ணங்களை தகர்க்கும் பணியை தொடங்குகின்றது. எமது அணுகுமுறையினூடாக கீற் மற்றும் அவர் காலத்து சமகால கலைஞர்களின் படைப்புகளை நுணுக்கமாக பார்வையிடுவதை ஊக்குவிக்க முயல்கிறோம்.”
‘சந்திப்புகள்’ கண்காட்சியின் மூன்றாம் சுழற்சியில் புதிய இலவச பொது நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கும் கலைப்படைப்புகளுக்கமான ஊடாட்டத்தை அதிகரிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் ஓவியர்களுடன் கேலரி உரையாடல், தொழில்வல்லுனர்களுடன் பயிற்சிபட்டறைகள் மற்றும் அருங்காட்சியக எடுத்தாளுனர்கள் மற்றும் வருகைக்கல்வியாளர்களுடன் கண்காட்சி சுற்றுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
‘சந்திப்புகள்’ கண்காட்சியானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கடர் கல்வி நிறுவனத்தின் அளப்பரிய ஆதரவாலும், ப்ஹயார் ப்ஹர்ஸ்ட் காப்புறுதி மற்றும் நிலு கட்டிடம் மற்றும் பொறியியல் நிறுவனத்தின் ஆதரவையும் பெற்றுள்ளது. வானொலி ஒருங்கினைப்பாளர்களாக Lite 87, Rhythm World, மற்றும் TNL Now இயங்குகின்றன.
நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.mmca-srilanka.org நாடுங்கள் அல்லது முகப்புத்தகத்தில் facebook.com/mmcasrilanka அல்லது இன்ஸ்டாக்ராமில் instagram.com/mmcasrilanka/ தொடருங்கள்.
– முடிவு–
01 நவம்பர் 2022
தலைப்பு: MMCA இலங்கையின் முதல் தீவிர அருங்காட்சியகப் பயிற்சி திட்டம் நிறைவு பெற்றுள்ளது.
இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகமானது (MMCA இலங்கை), தனது முதல் தீவிர அருங்காட்சியக பயிற்சியை (MI) வெற்றிகரமாக நடத்தியது. இப்பயிற்சி, 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் திகதி முதல் 28ம் திகதி வரை, ஐந்து நாட்களில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியானது, MMCA இலங்கையின் வளாகத்திலும், ஜோன் கீல்ஸ் X இணை வேலைத்தளத்திலும் நடத்தப்பட்டது. இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தின் ஆதரவுடன், ஒரு வருட காலமாக MMCA இலங்கை, அம்ஸ்டர்டாம் கலைப் பல்கலைக்கழகத்திலுள்ள ரெயின்வார்ட் அகாடமி மற்றும் நெதர்லாந்தின் கலாச்சார மரபு நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்பின் விளைவாகவே இந்த தீவிர அருங்காட்சியக பயிற்சி (MI) திட்டம் உருப்பெற்றது.
“இந்த முயற்சியானது, இலங்கையின் தொழில் நிபுணர்களின் திறனை வலுப்படுத்துவதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரை ஈடுபடுத்துவதனால் இலங்கையின் கலாச்சாரத்தையும் பாதுகாத்து மேம்படுத்துகிறது. அருங்காட்சியகத் துறையில் பணிபுரியும் இளம் தொழில் நிபுணர்களிடையே அறிவுப் பரிமாற்றம் மற்றும் தொழில் சார்ந்த வலைத்தளங்களை உருவாக்குவது முன்னரை விட இக்காலத்தில் முக்கியமானது. இத்துறைக்கு இலங்கையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. இலங்கையில் முதல் முறையாக முன்னெடுக்கப்படும் இந்த முக்கிய முயற்சிக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்.” என இலங்கைக்கு நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவரான மேதகு பொனி ஷோபக் அவர்கள், இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் வழங்கிய ஆதரவைக் குறித்து பேசுகையில் கூறினார்.
இலங்கையில் உள்ள 19க்கும் மேற்பட்ட கலாச்சார அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இருபத்திரண்டு முழுநேர பங்கேற்பாளர்களும் ஒன்பது பகுதிநேர பங்கேற்பாளர்களும் இந்த பயிற்சி திட்டத்தில் இணைந்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக நான்கு விரிவுரைகள், ஆறு பட்டறைகள் மற்றும் குழு செயற்பாடுகள், MMCA இலங்கைக்கு ஐந்து கள ஆய்வுப் பயணங்கள், எட்டு கலந்துரையாடல்கள் மற்றும் இறுதி குழு விளக்கக்காட்சிகள் என்பவற்றில் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். கள ஆய்வுப் பயணங்களின்போது, MMCA இலங்கையின் காட்சி அறைகளில் பங்கேற்பாளர்கள் வழக்கு ஆய்வுகளை நடத்த சந்தர்ப்பம் பெற்றனர். “அருங்காட்சியகங்கள் மற்றும் காட்சியறைகள் பற்றிய கல்விப் பின்னணி இல்லாததால், இத்துறையின் முக்கியமான அடிப்படைகளைக் குறித்து நான் புதிதாகக் கற்றுக்கொண்டேன். எமது கண்காட்சிகளுக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்ள இந்த பயிற்சி எனக்கு உதவியது,” என்று ஒரு பங்கேற்பாளர் குறிப்பிட்டார். இந்த பயிற்சி திட்டத்தில் பங்குபற்றியதால் நாம் பெற்ற அநேக பலன்களுள் “துறை சார்ந்த வலைத்தளங்களை உருவாக்குதல் மற்றும் பல்வேறு நிறுவனங்களிலிருந்து கற்றல்” ஆகியன குறிப்பிடத்தக்கவை, என்று பல பங்கேற்பாளர்களின் கருத்துக்களை ஒருவர் தொகுத்து கூறினார்.
அருங்காட்சியகப் பயிற்சியானது பல விதமாக வடிவமைக்கப்படலாம்; இந்த தீவிர அருங்காட்சியக பயிற்சியானது, இலங்கையின் அருங்காட்சியகத் துறையில் திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். கலைப்படைப்புகளுடன் பார்வையாளர்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கும் நோக்குடன் பல்வேறு செயற்பாடுகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டன. MMCA இலங்கையின் தலைமை “ஒரு அருங்காட்சியகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பற்றி நிலவிய பல யோசனைகளை விலக்கிவிட்டு, பார்வையாளர்கள் ஒரு அருங்காட்சியகத்தை அனுபவிக்கக்கூடிய பல்வேறு வழிகளை நாங்கள் புதிய கோணங்களிலிருந்து சிந்தித்தோம். இத்தீவிர அருங்காட்சியக பயிற்சியின் ஐந்து உற்சாகமூட்டும் நாட்களில் உரையாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்றன; பங்கேற்பாளர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடினர்; ஸ்ப்ரைட் பான பேணி ஒன்றினைப் பற்றி 50 கேள்விகளுக்கு பதிலளித்தனர்; ஒரு கயிற்றில் முடிச்சுகள் கட்டினர்; ‘பார்வையாளர்கள்’ என்ற பதத்துக்குப் பதிலாக வேறு பதங்களைப் பயன்படுத்த முற்பட்டனர்; ஒரு பொருளின் முக்கியத்துவத்துக்கும் அதனைக்குறித்து கூறப்படும் விளக்கத்துக்கும் உள்ள தொடர்பை விளங்கிக் கொண்டனர்; சிறிய கதைகளுக்கும் அவற்றில் தாக்கம் செலுத்தும் பெரிய காரணிகளுக்கும் உள்ள இடைத்தொடர்புகளை ஆராய்ந்தனர்; இவ்வாறான அனுபவங்களின் விளைவாகவே இப்பயிற்சி தீவிரமாக இருந்தது. பார்வையாளர்களின் ஈடுபாட்டைக் குறித்து நாம் ஒன்றாக சிந்தித்து, சிறந்த அருங்காட்சியக அனுபவங்களை உருவாக்க வேண்டும்,’’ என்று MMCA இலங்கையின் தலைமை கண்காணிப்பாளரான ஷாமினி பெரேரா பயிற்சித் திட்டத்தைப் பற்றி விவரித்தார்.
பங்குபற்றியவர்களுக்கு பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இலங்கைக்கு நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவரான மேதகு பொனி ஷோபக் அவர்கள்; நெதர்லாந்தின் கலாச்சார மரபு நிறுவனத்தில் கலைத் தொகுப்புக்களுக்கு தலைவரான யோலண்டா எஸெண்டாம்; ஆம்ஸ்டர்டாம் கலைப் பல்கலைக்கழகத்தின் ரயின்வார்ட் கலைக்கூடத்தில் (Reinwardt Academy) சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு முகாமையாளருமான ரூபன் ஸ்மிட்; மற்றும் MMCA இலங்கையின் தலைமைக் கண்காணிப்பாளரான ஷாமினி பெரேரா ஆகியோர் பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கினர்.
மேலதிக தகவலுக்கு, இணையதளம் மூலம் www.mmca-srilanka.org ; அல்லது முகநூலில் facebook.com/mmcasrilanka ; மற்றும் படவரியில் (Instagram) instagram.com/mmcasrilanka/ ; இலங்கை MMCAஐப் பின்தொடரவும்.
– முடிவு–
01 நவம்பர் 2022
தலைப்பு: நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியில், இலங்கையின் சர்வதேச உறவுகளை காட்சிப்படுத்துகின்றது.
நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் (MMCA இலங்கை) ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் பல்வேறு சந்திப்புகளை பார்வையிடலாம். இக் கண்காட்சியின் காட்சி 1 சர்வதேச அரங்கில் இலங்கையின் ராஜதந்திர மற்றும் பூகோள அரசியலின் தொடக்கத்தின் வரலாறை காட்சிப்படுத்துகிறது. இலங்கையின் மைல்கல்களை 1960களிலிருந்து பெறப்பட்ட கலைப் படைப்புகளைக் கொண்டு ஆவணப்படுத்துகிறது.
1955ல் இடம்பெற்ற பண்டுங் கருத்தரங்கம் என்றழைக்கப்படும் முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க கருத்தரங்கமானது, உலக மக்கள் தொகையில் 54% வீத மக்கள் பிரதிநிதிகளை ஒன்றுகூட வழிவகுத்தது. இக்கருத்தரங்கமானது, சோவியத் ஒன்றியத்தின் ஆதரவாளர்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற பனிப்போர் காலத்தில், 1961ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணிசேரா இயக்கத்தின் (NAM) தொடக்கத்திற்கு வித்திட்டது. NAM அமைப்பில் இலங்கையும் ஒன்றிணைந்து சுதந்திரத்திற்கு பின்னரான பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களை அங்கீகரிக்கும் பல நாடுகளில் ஒன்றாகியது.
ஆப்ரே கொலெட்டின் (1920–1992) ‘The Bandung Conference’ (1955) பண்டுங் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களின் கேலிச்சித்திர படைப்பாகும். NAMஇல் கலந்துகொண்ட முக்கிய பிரதிநிதிகளில் இலங்கை பிரதமர் சர் ஜோன் கொத்தலாவல (1897–1980), எகிப்திய பிரதமர் கமால் அப்டெல் நசர் (1918–1970) மற்றும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை (1889–1964) காட்ச்சிப்படுத்திகின்றது. வருகை தந்திருந்த 29 அரசியல் பிரதிநிதிகளில், சீனப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜூ என்லாயையும் (1898–1976) ஆப்ரே கொலெட் காட்சிப்படுத்தியுள்ளார். சீனப் பிரதமரை கடைசியாக நிற்பதாக காட்சிப்படுத்துவத்தினூடாக காலனியநீக்கம், சுய ஆட்சி மற்றும் வன்முறைக்கு எதிரான இலட்சியங்களின் பகுதியான பொருளாதார அபிவிருத்தியையொட்டிய கலந்துரையாடல்களில் சீனாவின் வளர்ந்துவரும் தாக்கத்தை குறிக்கின்றது.
இலங்கைப் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் (1916–2000) தலைமையில் இலங்கை, அணிசேரா இயக்கத்தின் ஐந்தாவது உச்சிமாநாட்டை 86 நாடுகளின் பங்களிப்போடு 1976ம் ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 19 வரை நடாத்தியது. இலங்கையின் பெருமையை வெளிக்காட்ட NAM கூட்டத்தின் நோக்கத்தையொட்டிய கலைப்படைப்புகள், இலக்கிய படைப்புகள் மற்றும் பல்வேறு ஊடகங்களினூடாக பண்டாரநாயக்க மிக சாதூர்யமாக செயல்படுத்தினார்.
இவ் நிகழ்ச்சியின் முக்கிய கலைப்படைப்பாக செனக சேனநாயக்கவின் கலைப்படைப்பு காட்சிப்படுத்தப்பட்டது. ஹோட்டல் லங்கா ஒபிரோயில் (சினமன் கிராண்ட்) வருகை தந்திருந்த பிரமுகர்கள் பார்க்கும் வண்ணம் இப்பிரம்மாண்டமான கலைப்படைப்பு காட்சிப்படுத்தப்பட்டது. இவ் ஓவியத்தில் அற்புதமான நிலப்பரப்பில் பச்சை, கபிலன், நீளம், சாம்பல், வெளிர் வெள்ளை நிறம் போன்ற பல்வேறு வண்ணங்களைக் கொண்ட மிருகங்கள் உலா வருவதை காணலாம். மிருகங்களின் தனித்துவமான முக இலட்சணங்கள் இன்மை உயிரினங்களுக்கு மத்தியில் உள்ள ஒருமைப்பாட்டை காண்பிக்கின்றது. அதே போன்று, அவற்றின் உடல்கள் வட்ட வடிவில் தட்டையான நிறங்களை கொண்டிருப்பதால் மிருகங்களுக்கு மத்தியிலான வேறுபாட்டை விட ஒற்றுமையை வெளிக்கொணர்கிறது. இவ் ஓவியத்தினூடாக தேசமும் அதன் இயற்கை வளங்களின் சமநிலையை காட்சிப்படுத்தும் அதே வேளையில் அணிசேரா இயக்கத்தின் நோக்கம் மற்றும் அதன் நன்மைகளை கோடிட்டு காட்டுகின்றது.
மேலும், இத்தினத்தை நினைவுகூரும் விதமாக ஐந்து மற்றும் இரண்டு ருபாய் நாணயங்களை பண்டாரநாயக்க அரசாங்கம் வெளியிட்டது. இந் நாணயங்கள் மறைந்த பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை காட்சிப்படுத்திகின்றது. 1970லிருந்து 1973 வரை கட்டப்பட்ட BMICH ஆனது சீனக் குடியரசால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டது. 1968ம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்க அணிசேரா இயக்கத்தின் 5வது உச்சி மாநாட்டை நடாத்துவதற்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கருத்தரங்க மண்டபம் ஒன்றை கோரிக்கையாக கேட்டதின் படி சீன அரசாங்கம் வழங்கிய பரிசாகும். இந் நாணயங்கள் மாநாட்டை மட்டுமல்லாது, இலங்கை-சீன உறவின் தொடக்கத்தையும் காட்சிப்படுத்துகின்றது.
1972ம் ஆண்டு இலங்கை குடியரசாகியதையொட்டி ‘தேசிய சின்னம் மற்றும் கொடி வடிவமைப்பு குழு’ தேசிய சின்னத்தை வடிவமைத்தது. இச் சின்னமானது பௌத்த கலாசாரத்தின் தூய்மை மற்றும் பிணைப்பற்ற நிலையை குறிக்கும் வண்ணமாக நீலோட்ப மலரின் இதழ்களை கொண்டுள்ளது.
தாமரை குறியீடு ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் காட்சி 1இல் உள்ள இருவேறு கால பதிப்புகளில் காணக்கூடியதாகவுள்ளது. 1968ம் ஆண்டு ஆப்பிரிக்க-ஆசிய எழுத்தாளர்கள் குழு ‘The Call’ எனும் சஞ்சிகை மற்றும் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்ட காலாண்டு சஞ்சிகையான ‘Afro-Asian Writings’ வெளியிட்டது. 1970களில் ‘Afro-Asian Writings’, ‘Lotus: Afro-Asian Writings’ (தாமரை: ஆப்பிரிக்க-ஆசிய எழுத்து) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப் பதிப்பானது பனிப்போர் காலத்தின் ‘மூன்றாம் உலக’ இலக்கியப் படைப்புகளின் மிக முக்கிய படைப்புகளை கொண்டிருப்பதாக கருதப்படுகின்றது.
இப் பல்வேறு ‘சந்திப்புகள்’ ஊடாக இலங்கையின் இராஜதந்திர உறவுகள் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை காணக்கூடியதாகவுள்ளது. 1960 மற்றும் 70களில் இலங்கை சென்ற பாதை என்ன என்பதை ‘சந்திப்புகள்’ கண்காட்சி மிக அருமையாக காட்சிப்படுத்துகின்றது. 50 வருட சந்திப்புகள் மற்றும் தலைமைத்துவங்கள் எவ்வாறு இலங்கை வரலாற்றை தாக்கியது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
மேலதிக தகவலுக்கு, இணையதளம் மூலம் www.mmca-srilanka.org; அல்லது முகநூலில் facebook.com/mmcasrilanka; மற்றும் படவரியில் instagram.com/mmcasrilanka/; இலங்கை MMCAஐப் பின்தொடரவும்.
– முடிவு–
01 செப்டம்பர் 2022
தலைப்பு: வருகை தரும் பார்வையாளர்களுக்கு கல்வியளிப்போருக்கென, இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி.
“நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம் ஒன்றிற்கு, பார்வையாளர் அனுபவம் எவ்வளவு முக்கியமானது? அப்பார்வையாளர்களின் அனுபவம் எப்போது ஆரம்பிக்கிறது? ஒருவர் அருங்காட்சியகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் போதா, அல்லது சமூக ஊடகங்களிலேயே ஆரம்பிக்கிறதா? அருங்காட்சியகத்தைப் பார்வையிட மக்களைத் தூண்டுவது என்ன? ஒரு அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களும் அவ்வருங்காட்சியகத்தை ஒரே மாதிரியாக அனுபவிப்பார்களா? எங்கள் பார்வையாளர்களுக்கு மிகச் சிறந்த அருங்காட்சியக அனுபவத்தை எவ்வாறு வழங்குவது என ஆராயும்போது, நாங்கள் எம்மைக் கேட்டுக்கொள்ளும் சில கேள்விகளே இவை,” என்று MMCA இலங்கையின் தலைமைக் கண்காணிப்பாளரான ஷாமினி பெரேரா கூறுகிறார்.
பொது மக்கள் இலகுவாக அணுகக்கூடிய அருங்காட்சியகத்தை இலங்கையில் நிறுவுவதே இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் (MMCA Sri Lanka) நோக்காகும். இந்த நோக்கை அடைவதற்கு, அருங்காட்சியகத் துறை பணியாளர்களின் திறனை MMCA இலங்கை கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக, சர்வதேசத்தில் அருங்காட்சியகத் துறையினால் நிர்ணயிக்கப்பட்ட தொழில்முறை தரத்தை அடைவதற்கு அப்பணியாளர்களை தயார்படுத்துவதுடன், இலங்கைச் சூழலுடன் சம்பந்தப்பட்ட சவால்களைச் சந்திப்பதற்குத் தேவையான அறிவையும் அவர்களுக்கு கொடுத்து தயார்படுத்த வேண்டும்.
அருங்காட்சியப் வருகையாளர்களின் கல்வியாளர் (Visitor Educator – VE) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அருங்காட்சியம் அறிமுகப்படுத்தியது. இந்த VE திட்டமானது, உலகெங்கிலும் உள்ள தொழில்முறை அருங்காட்சியக செயல்பாடுகள் மற்றும் கல்வியியல் அணுகுமுறைகளின் தனிச்சிறப்புகளைக் கொண்ட ‘வழிகாட்டிகளுக்கான நிகழ்ச்சிகளை’ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகையாளர்களின் கல்வியாளர் (Visitor Educator) என்ற பதவியையும் அதற்கான பயிற்சித் திட்டத்தையும் இலங்கையில் முதல் முறையாக MMCA இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டில், ‘அருங்காட்சியக கண்காணிப்பாளருக்கான கற்றல் மற்றும் பயிற்சி’ என்ற பதவி உருவாக்கப்பட்டது. இது, கண்காட்சி தயாரிப்பை விட கல்விப் பணிகளில் அருங்காட்சியகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்தப் பொறுப்பை ஏற்ற முதல் கண்காணிப்பாளரான, சனுஜா குணதிலக்க, பார்வையாளர்களின் கல்வியாளர் (VE) திட்டத்தை அமைத்து வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளார். சனுஜா தனது பணியைப் பற்றி பேசுகையில், ‘வருகையாளர்களின் கல்வியாளர்’ (VE) பயிற்சியானது, பல துறைகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார். “ஆராய்ச்சி, கலைத் தொகுப்புகளின் பாதுகாப்பு, வாடிக்கையாளர் சேவை, குழந்தைகள் மற்றும் முதிர்ந்தோருக்கு கற்பித்தல் முறைகள், தரவு சேகரித்தல், காட்சி கலை சார்ந்த சொற்களைப் புரிந்துகொள்ளல், நிகழ்ச்சிகளை நடத்துதல், மற்றும் மக்கள் கூட்டத்துக்கு முன் பேசப் பழகுதல் ஆகியன இப்பயிற்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ‘வருகையாளர்களின் கல்வியாளர்கள்’ (VEs), MMCA இலங்கையில் கிடைக்கும் அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் திறன்களை, இலங்கை மற்றும் சர்வதேச மட்டத்திலுள்ள தொழில்முறை அருங்காட்சியகங்களில் அல்லது அதற்கு அப்பால் பல்வேறு தொழில்களில் பயன்படுத்த முடியும். இதனாலேயே இப்பதவி கவர்ச்சிகரமான ஒன்றாக அமைகிறது.
MMCA இலங்கையின் ‘வருகையாளர்களின் கல்வியாளர்கள்’ (VEக்கள்), வருகையாளர்களுக்கும் அருங்காட்சியகத்திற்கும் இடையிலான தொடர்பில் முதல் புள்ளிகளாக முக்கிய பங்கு வகிக்கின்றனர். அநேகமான வேளைகளில், அருங்காட்சியகங்களுக்கு பாடசாலை மாணவர்கள் வருகை தரும்போது, அவர்களுடைய அனுபவங்கள் பெரும்பாலும் ஊடாடலற்றவையாகவும், செயலற்றவையாகவும் அமைந்துள்ளன. இவ் அனுபவங்களில், மாணவர்களுக்கும் அருங்காட்சியகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. இதற்கு நேர்மாறாக, MMCA இலங்கையானது, வருகையாளர்களின் அனுபவத்தின் தரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது; மாணவர்கள் இணையத்தில் அருங்காட்சியகத்துடன் ஈடுபடும் நேரம் முதல், கலைகாட்சி கூடங்களில் அவர்களுடைய அனுபவம், மற்றும் அவர்கள் வெளியேறும்போதுள்ள அனுபவம், ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. “அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிடும்போது, வருகையாளர்கள் ‘VEக்களை’ சந்திக்கிறார்கள்; அந்த VEக்கள் வருகையாளர்களை நுழைவாயிலருகே சந்தித்து வரவேற்கவும், கலைகாட்சி கூடங்களில் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் பயிற்சி பெற்றவர்கள். ‘என்னைக் கேளுங்கள்,’ மற்றும் ‘இலவச அருங்காட்சியக வழிகாட்டி’ என்று சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ‘வருகையாளர்களின் கல்வியாளர்கள்’ (VEக்கள்) அணிந்திருக்கும் அடையாள சின்னங்கள் மூலம் அவர்களை அடையாளம் காண முடியும். எல்லா வருகையாளர்களும் ஒரு VE ஐ அணுகுவதன் மூலம் கண்காட்சியை அனுபவிக்க விரும்புவார்கள் என கூற முடியாவிட்டாலும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகளைப் பற்றி பேசவும், கலைகாட்சி கூடங்களில் கேள்விகள் உள்ளவர்களுடன் ஈடுபடவும், ஒரு கலைகாட்சி கூடத்தையோ அல்லது முழு கண்காட்சியையோ சுற்றிப் பார்க்க வழிகாட்டவும், VEக்கள் ஆயத்தமாக உள்ளனர்,” என்று MMCA இலங்கையின் கலைகாட்சி கூட முகாமையாளர், தாரிக் தாஹிரீன், கூறினார்.
கண்காட்சியிலுள்ள கலைப்படைப்புகளைப் பற்றி வருகையாளர்கள் அறிந்து கொள்ளவும், அவற்றுடன் ஈடுபடவும், அவை படைக்கப்பட்டபோது நிலவிய சந்தர்ப்ப சூழலை விளக்கவும், உரையாடல்கள், சுற்றுப்பயணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் மூலம் நுணுகிய பார்வை கொண்ட நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், VEக்கள் உதவுகிறார்கள். மேலும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், கண்காட்சியில் உள்ள காட்சிப் பொருட்களைப் பராமரிக்கவும், அருங்காட்சியகத்தின் வாராந்திர பொது நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தவும் VEக்கள் உதவுகின்றனர். 2019 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் VE திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, 40 க்கும் மேற்பட்ட VEக்கள் அருங்காட்சியகத்துடன் வேலை செய்துள்ளனர்.
“நிதி உதவியே நாம் செய்யும் பணியை சாத்தியமாக்குகிறது. எமது பணியில் கண்காட்சிகள் ஒரு முக்கிய அம்சமாக இருந்தாலும், எங்கள் VEக்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்ச்சியில் நாங்கள் சார்ந்துள்ளோம் – ஏனெனில், எங்கள் கலைகாட்சி கூடங்களுக்குள் நுழையும் வருகையாளர்கள், எங்கு சென்று, எதை, எப்படி பார்த்து விளங்குவது என்று தெரியாத நிலையிலிருக்கும்போது, அத்தடைகளைத் தகர்க்க உதவுவது எமது VEக்களே” என பெரேரா கூறுகிறார். கலை முயற்சிகளுக்கான ஸ்தாபனம் (FfAI) மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (Nations Trust Bank PLC), VE திட்டத்துக்கு நிதி உதவி மூலம் ஆதரவளிக்கின்றன. நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, சஞ்சய செனரத், MMCA இலங்கைக்கு வங்கியின் ஆதரவைப் பற்றி பேசுகையில், அடுத்த தலைமுறையில் மாற்றத்தை உருவாக்குபவர்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பின்வருமாறு எதிரொலித்தார் – “நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியானது, உள்ளூர் கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதில் வலுவான ஆதரவாளர் என்ற ரீதியில், புதிய தலைமுறைக்கு இலங்கையின் சமகால கலையை வெளிப்படுத்தவும், அதே வேளை, உள்ளூர் கலைஞர்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தவும் MMCA இலங்கை எடுக்கும் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க எதிர்பார்ப்புடன் முன்வருகிறது.”
MMCA இலங்கையில் வருகையாளரின் கல்வியாளராக பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள், [email protected] என்ற முகவரிக்கு தங்கள் சுயவிவரங்களை (CV ஐ) மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
[Named Quotes]
“MMCA இலங்கையானது, ஒரு கலை அருங்காட்சியகத்தின் நுணுக்கங்களை அனுபவிப்பதற்கான சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க இதுவே காரணம். இந்த வேலையின் மூலம் நான் புதிய தகவலைக் கற்றுக் கொண்டதுடன், வேலை நெகிழ்வானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதால், எனக்கு மிகவும் பலனளிக்கிறது!”
விரஞ்ஜா ஜயவர்தன, வருகையாளரின் கல்வியாளர், MMCA இலங்கை.
“இந்த வேலையின் மூலம், நான் தினமும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்கிறேன். இந்த வேலை என்னை சிறந்த மனிதனாகவும் மாற்றியுள்ளது.”
ஹசன் நிஸாம், வருகையாளரின் கல்வியாளர், MMCA இலங்கை
“கலை, கலை வரலாறு மற்றும் கலை பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு MMCA இலங்கை மூலமே நான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டேன். கலையின் பல்வகைத்தன்மையைப் பற்றி – அதாவது, உள்ளூர் மற்றும் சர்வதேச கலை, அவற்றின் விவரிப்புகள், மற்றும் ஒரு கதையை சொல்வதிலும் வரலாற்றில் ஒரு காலத்தை வெளிப்படுத்துவதிலும் கலையின் பங்கு ஆகியவற்றைப் பற்றி – நான் கற்றுக்கொண்டேன். பலதரப்பட்ட நபர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது – கலையை வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து பார்க்க இது எனக்கு உதவியது. இந்த அனுபவம் கலை உலகில் உள்ள பல வாய்ப்புகளையும், மற்றைய துறைகளுடனான தொடர்புகளையும் வெளிப்படுத்தியுள்ளது. நான் MMCA இலங்கைக்கு வராவிட்டால், அந்த வாய்ப்புகளையும் தொடர்புகளையும் ஆராய்ந்திருக்க மாட்டேன்.”
தனுஜா மனோகரன், வருகையாளரின் கல்வியாளர், MMCA இலங்கை
[Photos]
https://driVE.google.com/file/d/1f7RPEFJEwlFI7X8fbJG6oPyN5alxbm7X/view?usp=sharing
படம்: 2022 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் ‘என்கவுன்டர்ஸ்’ கண்காட்சியில், MMCA இலங்கை வருகையாளரின் கல்வியாளர், யாமினி உமாபதி, வருகையாளர்களை ஈடுபடுத்துகிறார். மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
https://driVE.google.com/file/d/1A8tcYMUuXHkQ559uFajEhlHnzGnTGAwg/view?usp=sharing
படம்: 2022 ஆம் ஆண்டில் ‘என்கவுன்டர்ஸ்’ கண்காட்சியின்போது, MMCA இலங்கை வருகையாளரின் கல்வியாளர், நெத்மி ஹர்ஷனி, வருகையாளர்களை ‘ஸ்பாட்லைட்’ ஒன்றில் ஈடுபடுத்துகிறார் – இங்கு ‘ஸ்பாட்லைட்’ என்பது ஒரு கலைப்படைப்பை மையமாகக் கொண்ட ஆழமான, ஊடாடும் உரையாடல் ஆகும். மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
https://driVE.google.com/file/d/1UmulYaZ3Cf0LaEbz9AxvwZ915kT-kOl0/view?usp=sharing
படம்: 2022 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் ‘என்கவுன்டர்ஸ்’ கண்காட்சியின்போது, MMCA இலங்கை வருகையாளரின் கல்வியாளர்கள் தினால் சஜீவ மற்றும் மத்யூ ரொஜர் ஜோசப் ஆகியோர். மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
https://driVE.google.com/file/d/15AZW90ixUkE-f9-XE-86SJutBE8ec2GV/view?usp=sharing
படம்: 2022 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ‘என்கவுன்டர்ஸ்’ கண்காட்சியில், MMCA இலங்கை வருகையாளரின் கல்வியாளர் மத்யூ ரொஜர் ஜோசப், வருகையாளர் ஒருவரை ‘ஸ்பாட்லைட்’ ஒன்றில் ஈடுபடுத்துகிறார் – இங்கு ‘ஸ்பாட்லைட்’ என்பது ஒரு கலைப்படைப்பை மையமாகக் கொண்ட ஆழமான, ஊடாடும் உரையாடல் ஆகும். மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
https://driVE.google.com/file/d/1goGQbYMVfEQIOiJIRMe5KL9psP-YgJrM/view?usp=sharing
படம்: 2020 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் ‘நூறாயிரம் சிறு கதைகள்’ கண்காட்சியில், MMCA இலங்கை வருகையாளரின் கல்வியாளர், சந்துனி டி பொன்சேகா, பில்டிங் ஹோப் சில்ட்ரன்ஸ் சென்டரின் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஈடுபடுகிறார். மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
– முடிவு–
01 செப்டம்பர் 2022
தலைப்பு: இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகமானது, அதன் முதல் தீவிர அருங்காட்சியகப் பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம் (MMCA Sri Lanka) தனது முதல் தீவிர அருங்காட்சியக நிகழ்ச்சித்திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இலங்கையின் கலாசாரத் துறையில் தொழில் சார்ந்த திறனைக் கட்டியெழுப்புவதற்கான தேவையை நிவர்த்தி செய்வதற்காக, இப்பயிற்சித் திட்டத் தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் கலாச்சார மரபு நிறுவனம் (Cultural Heritage Agency of the Netherlands), மற்றும் ஆம்ஸ்டர்டாம் கலை பல்கலைக்கழகத்திலுள்ள ரெய்ன்வார்ட் அகாடமியுடன் (Reinwardt Academy) இணைந்து, இலங்கை MMCAயானது முதல் முறையாக இத்தகைய தீவிர அருங்காட்சியக பயிற்சியை வழங்க செயல்படுகிறது. இம்முயற்சிக்கு இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தின் தாராளமான ஆதரவு இன்றியமையாதது.
இந்த தீவிர அருங்காட்சியக நிகழ்ச்சித்திட்டமானது, பொது மற்றும் தனியார் கலை நிறுவனங்களில் கலைத் தொகுப்புகளுடன் மற்றும்/அல்லது கண்காட்சி நிகழ்ச்சிகளுடன் ஈடுபடுகின்ற கலாச்சார துறை நிபுணர்களுக்காகவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கலந்துரையாடலுக்கும், செயற்திட்ட பணி மூலம் கற்றலுக்கும், பங்குபற்றுவோர் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் கணிசமான நேரம் ஒதுக்கப்படும். நெதர்லாந்தின் கலாச்சார பாரம்பரிய நிறுவனம் மற்றும் ரெய்ன்வார்ட் அகாடமியில் இருந்து வருகை தரும் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் வழிகாட்டுதலால் இத்திட்டத்தில் பங்குபற்றுவோர் பயனடைவார்கள். இவை யாவற்றையும் நடத்த இலங்கை MMCA ஊழியர்கள் உதவி புரிவார்கள்.
பொதுவான கருப்பொருள்கள் மற்றும் பார்வையாளர்களின் ஈடுபாடு பற்றிய தற்போதைய விவாதங்களை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் இந்தப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி திட்டத்தில் பங்குபற்றுவோர், தாம் பணிபுரியும் நிறுவனங்களில் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், பார்வையாளர்களை அதிகரிக்கவும், பொதுமக்களுடனுள்ள தொடர்பை அதிகரிக்கவும் தேவையான நீண்டகால அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள உதவக்கூடியவாறு பயிற்சி பெறுவர்.
“இன்றைய அருங்காட்சியகங்களைப் பற்றி எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதைக் குறித்து ஒருங்கிணைப்பாளர் குழு சிறந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. அவர்களின் அர்ப்பணிப்பு, அறிவு, ஆற்றல் ஆகியவை தலை சிறந்தவை. இக்குழுவின் முழு கவனம் மற்றும் களைப்பற்ற சக்தியுடன், நடத்தப்படவிருக்கும் பயிற்சி திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். MMCAயுடன் இணைந்து நடத்தப்போகின்ற இந்த பயிற்சித் திட்டத்தை ரெயின்வார்ட் அகாடமி உண்மையிலேயே எதிர்பார்க்கிறது,” என்று ஆம்ஸ்டர்டாம் கலைப் பல்கலைக்கழக ரெயின்வார்ட் அகாடமியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளரான ரூபன் ஸ்மிட் குறிப்பிட்டார்.
முதலாவது தீவிர அருங்காட்சியகப் பயிற்சித் திட்டம், 2022ம் ஆண்டு ஐப்பசி (அக்டோபர்) மாதம் 24 முதல் 28ம் திகதி வரை கொழும்பில் நேர் சந்திப்பாக நடைபெறும்.
இப்பயிற்சி திட்டத்தில் பங்குபற்ற விரும்புவோர், விண்ணப்பிப்பதற்கு, 2022ம் ஆண்டு ஐப்பசி (அக்டோபர்) மாதம் 5ம் திகதி காலக்கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னதாக தங்கள் சுயவிபரங்களை (CV அல்லது Resume) [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அவர்கள் +94 76 22 43 120 ஐ அழைக்கலாம்.
– முடிவு–
01 செப்டம்பர் 2022
தலைப்பு: MMCA இலங்கை ஜோர்ஜ் கீற் ஸ்தாபகத்துடன் இணைகின்றது
நவீன மற்றும் சம காலக் கலைக்கான அருங்காட்சியகமானது ஜோர்ஜ் கீற்றின் படைப்புகளை ஆவணப்படுத்தி இவ் இலங்கை ஓவியரின் தெரிவு செய்யப்பட்ட ஓவியங்களூடாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
நவீன மற்றும் சமகாலக் கலைக்கான அருங்காட்சியகமானது (MMCA இலங்கை) இலங்கை மக்களுக்கு நவீன மற்றும் சமகால கலைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக பல்வேறு வழங்குநர்கள் மற்றும் தனியார் சேகரிப்பாளர்களுடன் இணைந்து கண்காட்சிகளை உருவாக்குகின்றது. 2021ம் ஆண்டு ஜான் கீல்ஸ் நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜோர்ஜ் கீற் ஸ்தாபக கூட்டமைப்பு அருங்காட்சியகத்திற்கு கையாள அனுமதி வழங்கப்பட்டது. தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரெய்ரா மற்றும் எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டி ஆய்விற்காக இவ் அலுவலகங்களிலுள்ள கீற்றின் நான்கு ஓவியங்களை பார்வையிட்ட பொழுதே MMCA இலங்கையின் இரண்டாம் கண்காட்சி ‘சந்திப்புகளுக்கான’ கரு உருவாகியது.
இக் கூட்டணியை பற்றி பெரெய்ரா அவர்கள் கூறியபொழுது, “ஜோர்ஜ் கீற்றின் ஓவியங்களை GKFஇன் தலைவரான மைக் அன்டோநியாஸ் அவர்கள் எமக்கு சுற்றிக்காண்பித்தது எமக்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பாகும். ஏனெனில் கீற்றின் படைப்புகளை ஒவ்வொருநாளும் பொதுமக்கள் பார்வையிட வாய்ப்பிருக்கவில்லை. ஆகையால் பெரெய்ரா மற்றும் ஹண்டி ‘பெப்ரவரி 2022இல் திறந்து வைக்கப்பட்ட ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் கீற்றின் படைப்புகளை உள்ளடக்கி மக்களுக்கு இலவசமாக அவற்றை பார்வையிடும் வாய்ப்பினை உருவாக்கினர்.
“GKF 1988ம் ஆண்டு ஓவியரின் வாழ்நாள் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் வளர்ந்துவரும் இலங்கை ஓவியர்களின் கலையை ஊக்குவித்து வெளியுலகுக்கு காண்பிப்பதாகும். MMCA இலங்கை போன்ற நிறுவனத்துடன் பணியாற்றுவதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் ஏனெனில் இலங்கை ஓவியர்களின் படைப்பை ஆவணப்படுத்துவதுடன் அவற்றை வெளியுலகுக்கு காட்சிப்படுத்துகின்றது. இச் ஸ்தாபகம் வருடந்தோறும் ‘Kala Pola’ எனும் திறந்த வெளி கலை காட்சியை ஒழுங்குசெய்து வருவதுடன், ‘Young Contemporaries’, ‘Nawa Kala Karuwo’, மற்றும் ‘Sri Lankan Art Exhibitions’ போன்ற நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்து வருகின்றது. நாம் கீற்றின் படைப்புகளை பேணுவதுடன் அவரின் படைப்புகளைப் பற்றிய பல்வேறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளோம். குறிப்பாக கீற்றின் நூறுவருடத்தையொட்டி 2001ம் ஆண்டில் புத்தகத்தை வெளியிட்டோம்,” என ஜோர்ஜ் கீற் ஸ்தாபகத்தின் தலைவர் மைக் அன்டோநியாஸ் கூறுகிறார்.
காட்சியிலுள்ள படைப்புகளைப் பற்றி ஹண்டி கூறியதாவது, “இலங்கையில் ஜோர்ஜ் கீற் பிரபலமானவர் என்ற போதும் பதிப்பகங்களை தவிர்த்து அவரின் படைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள வழியில்லாதலால் பொது மக்களுக்கு அவரின் ஓவியங்களைப் பற்றி மிகக் குறைந்த அளவே தெரிந்துள்ளது. இலங்கையின் ஏனைய நவீன ஓவியர்களுடன் ஒப்பிடும் பொழுது கீற்றின் படைப்புகள் பற்றி பல்வேறு பதிப்புகள் இருப்பினும் வெகு சில புத்தகங்களே குறிப்பிட்ட ஓவியங்களைப் பற்றி நுணுக்கமாக ஆராய்கின்றன. ‘சந்திப்புகள்’ கண்காட்சியூடாக தெரிவுசெய்யப்பட்ட கீற்றின் நான்கு ஓவியங்களான ‘The Friends’ (1982), ‘Pounding Paddy’ (1952) 11 பெப்ரவரி முதல் 22 மே வரை ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 1ல் காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் ‘The Offering (1949) மற்றும் ‘Kandyan Bride’ (1951) ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 3ல் நவம்பர் 13, 2022 முதல் மார்ச் 19, 2023 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
“இந் நான்கு ஓவியங்களும் ஷர்மினிக்கும் எனக்கும் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் தொடக்கப் புள்ளியை வழங்கியது. நாம் ஏனைய ஓவியர்களுடைய படைப்புகளுடன் உரையாடல் அல்லது ‘சந்திப்புகளை’ உருவாக்கியுள்ளோம்,” எனக் கூறிய சந்தேவ் மேலும் கூறியதாவது, “பிரதீப் தலவத்த (பி.1979), அப்துல் ஹலிக் அஸீஸ் (பி.1985), ஆப்ரே கொலெட் (1920–1992), மார்டின் விக்கிரமசிங்க (1890–1976), ஆசை ராசய்யா (1946–2021), ரிச்சர்ட் கேப்ரியல் (1924–2016), சுசிமான் நிர்மலவாசன் (பி.1982), ஆ.மார்க் (1933–2000), நெலுன் ஹரஸ்கம (பி.1959), மற்றும் ஜனனி குரேவின் (பி.1974) படைப்புகளை உள்ளடக்கியுள்ளோம். MMCA இலங்கை வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த ஓவியர்களின் ஒத்த கருத்துள்ள படைப்புகளை ஒன்றுக்கொன்று நேர்மாறாக காட்சிப்படுத்தியுள்ளனர். எடுத்தாளுமையானது புதிய மற்றும் எதிர்பாராத வகைகளில் கலை வரலாற்றை எவ்வாறு பார்வையிடுவது மற்றும் சிந்திப்பது என்பதை காண்பித்துள்ளது.
GKF முகம் கொடுக்கும் பாரிய சவால் இப் படைப்புகளை பாதுகாக்க தேவைப்படும் செலவாகும். இச் செலவில் ஓவியங்கள் மற்றும் வரைபடங்களை பாதுகாப்பதில் உள்ளடங்கும். ‘சந்திப்புகள்’ கண்காட்சியூடாக கீற்றின் நான்கு ஓவியங்கள் வெற்றிகரமாக பாதிக்கப்பட்டுள்ளது. கலைப் பாதுகாப்பைப் பற்றி ConsArtஐ சேர்ந்த உதய ஹெவவாசம் கூறியதாவது, “மிகப்பெரிய பாதிப்பு மர சட்டங்களுக்கேயாகும் ஏனெனில் அவை கரையானால் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஆகையால் அனைத்து சட்டங்களையும் மாற்றியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரேயொரு ஓவியமே வெள்ளத்தினால் வர்ணம் அழிந்திருந்தது. அதிர்ஷடவசமாக GKF சேதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட அவ் ஓவியத்தின் புகைப்படமத்தை வழங்கியதால் எம்மால் அப்பகுதியை மீளமைக்க முடிந்தது.” உதய ஹெவவாசம் இலங்கையில் மிகப் பிரபலமான கலைப் பாதுகாவலர் ஆவார். இவர் பல மாதங்கள் கீற்றின் ஓவியங்களை அவரின் ஸ்டூடியோ ConsArtல் மீளமைத்து பாதுகாக்காவிடின் எம்மால் கீற்றின் படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தியிருக்க முடியாது.
பாதுகாக்கும் பணி இடம்பெற்ற பொழுது ஓவியங்களின் பின்னால் கடந்த கால கண்காட்சிகள், தலைப்புகள் போன்ற தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். சரியான பாதுகாக்கும் முறையை பின்பற்றிய உதய கூறியதாவது, “இவ் விவரத்துணுக்குகள் கவனமாக பிரிக்கப்பட்ட பின்னர் அவை அசிட் நீக்கப்பட்டு மீண்டும் ஓவியத்தின் பின்னால் பாதுகாப்பான ஆசிட் இல்லாத தெளிவாகத்தெரிகின்ற அட்டைகளுடன் ஒட்டப்பட்டது.”
MMCA இலங்கையின் நவீன மற்றும் சமகால கலையை உருவாக்கும் இலட்சியமானது இவ்வாறான அருங்காட்சியகத் துறையில் கலைப்படைப்புகள் பற்றிய தகவல்களை கூறக்கூடிய நிபுணர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள், எடுத்தாளுநர்களுக்கு எவ்வாறு ஓவியரொருவரின் படைப்பை காட்சிப்படுத்துவது என்பதை தெளிவூட்டுகின்றனர்.
‘சந்திப்புகள்’ கண்காட்சி ஐரோப்பிய ஒன்றியம், கலை முன்னெடுப்புகளுக்கான ஸ்தாபனம், ஜான் கீல்ஸ் ஸ்தாபகம் மற்றும் தேசிய நம்பிக்கை வங்கியின் நன்கொடையால் நிறுவப்பட்டதாகும். இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகமானது (MMCA இலங்கை), கல்வியை முதன்மைப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகும். பொதுமக்கள், பாடசாலைகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் இன்பத்திற்காக, நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி, ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது.
– முடிவு–
01 செப்டம்பர் 2022
தலைப்பு: நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தில் பயிற்சிப்பணி
MMCA இலங்கை வளர்ந்து வரும் அருங்காட்சியகத்தின் முக்கிய பணியாக அடுத்த தலைமுறை அருங்காட்சியக வல்லுநர்களை, கண்காட்சி ஒழுங்கமைப்பு, கல்வி நிகழ்ச்சிகளை வழங்குவதற்குறிய ஆற்றலை உருவாக்க பயிற்சிப்பணியை ஒழுங்குமைத்துள்ளனர்.
தற்பொழுது, அருங்காட்சியகம் இரண்டு வகையான பயிற்சிப்பணிகளை வழங்குகிறது: பல்கலைக்கழக தொழில்வல்லுநர் பயிற்சிப்பணி மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிப்பணி. இரு பயிற்சிப்பணிகளிலும் பயிற்சிப்பணிபுரிபவர் அருங்காட்சியக பணியாளர்களுடன் இணைந்து துரித கதியில் இயங்கும் அருங்காட்சியகத்தில் பணிபுரியும் அனுபவத்தை பெற்றுக்கொள்கின்றனர்.
பல்கலைக்கழக பயிற்சிப்பணியுடன் MMCA இலங்கை பணியாளர்கள் இலங்கையில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். தற்காலத்தில் வேலைவாய்ப்பிற்கு வெறும் கல்வித்தகைமை மட்டும் போதாது. எனவே, இவ் இருமுகம் கொண்ட பல்கலைக்கழக நிகழ்ச்சியானது மாணவர்களுக்கு அவர்களின் கல்வி அருங்காட்சியக சூழலுக்கு எவ்வாறு பயன்படும் என்பதை அனுபவரீதியில் கற்றுக்கொடுக்கின்றது. தற்போதைய பணிக்கமர்த்துபவர்களுக்கு முன் அனுபவம் மிக முக்கியமானதாகவுள்ளது. தற்போது வரை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நுண்கலை துறையை சேர்ந்த பத்து இளங்கலை மாணவர்கள் கலை வரலாறு, கல்வி ஆராய்ச்சி மற்றும் மொழிப்பெயர்ப்பு சம்பந்தமான திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்கள்.
அருங்காட்சியகத்தில் குறிப்பிட்ட சில துறைகளில் பணிபுரிய விருப்புமுள்ளவர்களுக்கு இளைஞர் யுவதிகள் தொழில்வல்லுநர் பயிற்சிப்பணியின் கீழ் வாய்ப்புகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. 2022 பெப்ரவரி முதல் MMCA இலங்கை பன்னிரண்டு இளம் தொழில்வல்லுனர் பயிற்சிப்பணியாளர்களுடன் கண்காட்சி ஆராய்ச்சி, கண்காட்சி உற்பத்தி, வடிவமைப்பு, டிஜிட்டல் திட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வி தகவல் ஆய்வு.
தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரெய்ரா MMCA இலங்கையின் பயிற்சிப்பணியைப் பற்றி கூறியதாவது, “அருங்காட்சியகங்களில் பயிற்சிப்பணி புரிய நான் ஆசைப்பட்டுள்ளேன் ஆயினும் அதற்குரிய தகைமைகள் என்னிடம் இல்லை என்று எண்ணினேன். பலருக்கு இவ்வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே MMCA இலங்கையில் நாம் எம்மால் முடிந்தளவு பயிற்சிப்பணிக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். பயிற்சிப்பணிகளை மேம்படுத்தும் அதே வேளையில் அடுத்த தலைமுறைக்கு இத்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கி என்னைப்போல் கலைத்துறையில் பணிபுரிய முடியாது என எண்ணுபவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.”
MMCA இலங்கையில் வருகையாளரின் கல்வியாளராக பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள், [email protected] என்ற முகவரிக்கு தங்கள் சுயவிவரங்களை (CV ஐ) மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
[Named Quotes]
“MMCA இலங்கையில் நான் பயிற்சிபணிபுரிந்த மூன்று மாதங்கள் தனித்துவமானவை. நான் அருங்காட்சியக நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டேன்.
இலங்கையின் நவீன மற்றும் சமகால கலையைப் பற்றி நான் நன்கு கற்றுக்கொண்டேன். இவ் வாய்ப்பினூடாக கல்வி மற்றும் பொது இகழ்ச்சிகள் மற்றும் எடுத்தாளுனர் பணிகள் பற்றி நான் கற்றுக்கொண்டேன். ஆகவே இவ் வாய்ப்பளித்தமைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.”
ரஷ்மி சில்வா
வடிவமைப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகள் பயிற்சிபணியாளர்
பெப்ரவரி-ஏப்ரல் 2022
“காமினி ரட்னவீரவின் கலைப்படைப்புகளை மீளமைக்கும் பொழுது அதன் பின்னணியில் எவ்வளவு நுணுக்கமாக வேலை செய்வதை நினைக்கும்பொழுதும் மூலக் கலைப்படைப்புகளை கண்காட்சிக்கு தயார்படுத்தும் பணியையும் நினைக்கும் பொழுது எனக்கு ஆச்சர்யமாகவுள்ளது.
இக் கண்காட்சிக்காக இக் கலைப்படைப்புகளை தெரிவு செய்ய பல மாதங்களான கடின உழைப்பை எண்ணும் பொழுது நான் வியப்படைகிறேன். இவ்வளவு கடின உழைப்புக்கு பின்னர் இக்கண்காட்சியை காணக் கிடைத்தது மிகவும் உன்னதமான அனுபவமாகும்.”
நபீல் மர்சூக்
எடுத்தாளுனர் மற்றும் கண்காட்சி உற்பத்தி பயிற்சிபணியாளர்
பெப்ரவரி-ஏப்ரல் 2022
“MMCA இலங்கையில் பயிற்சிப்பணி புரிந்த அனுபவம் முழுமையானதாகவும் என் கண்களை திறக்கும் அனுபவமாகவும் அமைந்துள்ளது. மையக்குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் பழைய உத்திகளை மேம்படுத்தியதுடன், புதிய உத்திகளை கற்றுக்கொண்டதுடன், இது நாள் வரை நான் நினைத்திருக்காத புதிய தொழில்த்துறைகளையும் எனக்கு அறியத்தந்துள்ளது. இவை அனைத்திற்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.”
அய்ஷா அன்வர்
பொது நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி பயிற்சிபணியாளர்
மே-ஆகஸ்ட் 2022
[Photos]
https://drive.google.com/file/d/1b3MC3x0mITBnUaUBZ7hbV7gZkEgonOE5/view?usp=sharing
படம்: கொழும்பிலுள்ள மில்க் அண்ட் ஹனி கஃபேயில் செப்டம்பர் 2022 இடம்பெற்ற நிகழ்வில் கல்வி நிகழ்ச்சிகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கியபொழுது பிரமோதா வீரசேகர (துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகள்) மற்றும் கல்வி மற்றும் தகவல் ஆய்வு பயிற்சிபணியாளர் தனுஜா மனோகரன். மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
https://drive.google.com/file/d/1tDL7IJ8GOBaR6M7oRy32zgFB4x7J_Ad7/view?usp=sharing
படம்: ஆகஸ்ட் 2022 ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் தினால் சஜீவ (எடுத்தாளுனர் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் பயிற்ச்சிப்பணியாளர் மற்றும் மத்தியூ ரொஜர் ஜோசப் (கண்காட்சி உற்பத்தி பயிற்சிப்பணியாளர்). மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
https://drive.google.com/file/d/1l6LKi58ep8e9PZT-UK1w5iCPQHpC1KM_/view?usp=sharing
2022 MMCA இலங்கை அலுவலகத்தில் சந்துனி டீ போன்சேகா (எடுத்தாளுனர் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் பயிற்சிப்பணியாளர்). மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
https://drive.google.com/file/d/1T1zoHWrM9mgF1vlJ89TMYxG12NvkvDq0/view?usp=sharing
MMCA இலங்கையில் பணியாற்றிய பயிற்சிபணியாளர்களுக்கு பிரியாவிடை அளித்த பொழுது தினால் சஜீவ (எடுத்தாளுனர் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் பயிற்சிபணியாளர்), இசிர சூரியாராச்சி (வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் பயிற்சிபணியாளர்) மற்றும் மத்தியூ ரொஜர் ஜோசப் (கண்காட்சி உற்பத்தி பயிற்சிபணியாளர்). மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
https://drive.google.com/file/d/1Dgqqw1bZUTEPUg6W0pIUAom-1jjzbX45/view?usp=sharing
MMCA இலங்கையில் ஆகஸ்ட் 2022ல் பணிபுரிந்தவர்கள்- தனுஜா மனோகரன் மற்றும் சரித தொரதெனிய (கல்வி மற்றும் தகவல் நுண்ணாய்வு பயிற்சிப்பணியாளர்கள்) மற்றும் மனுஜ மல்லிகாராச்சி (வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் பயிற்சிப்பணியாளர்). மூலம் – இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், 2022.
– முடிவு–
01 அக்டோபர் 2022
தலைப்பு: இலங்கையின் சமகால கலை குறித்த முக்கியமான
உரையாடல்கள் தொடர்கின்றன: #SupportLocalArt உரைத் தொடரின் இரண்டாம் பதிப்பு நிறைவுற்றது.
#SupportLocalArt: உரைத் தொடரின் இரண்டாம் பதிப்பு நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தால் (MMCA இலங்கை) தொகுக்கப்பட்டு 24 ஜூலை முதல் 14 ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்றது. தொடரின் முதலாம் பதிப்பு 2021ஆம் ஆண்டில் சஸ்கியா பெர்னாண்டோ கேலரியால் ஆரம்பித்து வைக்கப்பட்டு நேஷன்ஸ் டிரஸ்ட் தனியார் வங்கியால் அனுசரணை வழங்கப்பட்டது.
“#SupportLocalArt உரைத் தொடர் கொரோனா ஊரடங்கு காலப்பகுதியில் இலங்கை கலைத் துறையில் மேலும் பல ஒருங்கிணைப்புகளை உருவாக்க தொடங்கப்பட்டது,” என சஸ்கியா பெர்னாண்டோ கேலரியின் ஸ்தாபகர் சஸ்கியா பெர்னாண்டோ கூறினார், “வெகு விரைவில் நாம் இந் நிகழ்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமாயின் எமது மொத்த சமூகத்திற்கும் கொண்டு சென்று இக் கலந்துரையாடல்களின் இலக்கு மற்றும் நோக்கத்தை விரிவுபடுத்த முடியும் என்பதை உணர்ந்துகொண்டோம். தொடரின் இரண்டாம் பதிப்பு MMCA இலங்கையால் நெருக்கடியான காலப்பகுதியில் தொடரப்பட்டது. மேலும், 2022ல் இத் தொடரின் எடுத்தாளுமை போராட்டத்தின் பல்வேறு கூறுகளால் தாக்கமடைந்தது,” என அவர் கூறினார்.
MMCA இலங்கையால் #SupportLocalArt உரைத் தொடரின் இரண்டாம் பதிப்பு, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழலுக்கான பதிலுரையாக அமைந்தது. இது மூன்று ஒன்லைன் உரையாடல்களை உள்ளடக்கியது. பல்வேறு பின்னணியிலிருந்து வருகை தந்திருந்த உறுப்பினர்கள் ஒன்று கூடி சமூகம், கலாச்சார ராஜதந்திரம் மற்றும் நகைச்சுவையோடு கலையின் தொடர்பை பற்றி உரையாடினார்கள்.
#SupportLocalArt உரையின் முதலாவது கலந்துரையாடல் “The Power of Community” ஜூலை 24, 2022 இடம்பெற்றது. இது MMCA இலங்கையின் எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டி கமலா வாசுகி (ஓவியர்), ஷாமரா வெட்டிமுனி (கல்வியாளர்) மற்றும் வெனுரி பெரேரா (ஓவியர்) அவர்களுடன் அவர்களின் சமூக செயல்பாடுகளின் மீது சமுதாயத்தின் பங்கு என்ன என்பதைப் பற்றி உரையாடினார். இவ் உரையாடலில் தற்போது இலங்கையில் நடைப்பெற்றுக்கொண்டுள்ள ‘போராட்டத்தின்’ உத்வேகம் மட்டுமல்லாது, குழுவிலுள்ள கலைஞர்கள் எவ்வாறு கலையையும் சமூக செயற்பாட்டையும் ஒன்றிணைத்து விழிப்புணர் மற்றும் பார்வையாளர்களுடன் ஊடாட்டத்தை கட்டியெழுப்பியுள்ளார்கள் என்பதையும் உள்ளடக்கியது.
இரண்டாம் உரையாடலில், #SupportLocalArt உரை: The Power of Diplomacy, ஆகஸ்ட் 7, 2022ம் ஆண்டு MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரெய்ரா, ஆரேலியா கொல்லார்ட் (இலங்கை பிரான்ஸ் தூதரகத்தின் கலாச்சார தூதருடன் இருப்பவர்), ஜார்ஜ் குக் (கல்வியாளர் மற்றும் ராஜதந்திர வரலாற்றாசிரியர்) மற்றும் கெல்லி மெக்கார்தி (முதலாம் செயலாளர், பொது மக்கள் விவகார பிரிவு, அமெரிக்க தூதரகம் இலங்கை) அவர்களுடன் இலங்கையின் கலை மற்றும் கலாசாரத்தில் இராஜதந்திரத்தின் பங்கு என்ன என்பதைப் பற்றி உரையாடினார். இவ் உரையில் கலாச்சார இராஜதந்திரத்தின் வரலாறு மற்றும் கலாச்சார வேலையின் மூலம் மென்மையான சக்தியைக்கொண்டு கேள்வியெழுப்பக்கூடிய நிலை சம்பிரதாய கலாச்சார இராஜதந்திரத்தால் செய்ய இயலாது என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டது. குழு உறுப்பினர்கள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கலாச்சார இராஜதந்திரத்தை பண்டைய காலம் முதல் தற்போது வரையான காலநிலையை ஒப்பிட்டனர். கலாச்சார இராஜதந்திரத்தை அரசு கொள்கையின் கட்டமைப்பதால் ஏற்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மாற்றி உரையாடியதுடன் மேல்தட்டு அரசியல் மீது ஏற்பட்டுள்ள எதிர்மறையான பிம்பத்தை எவ்வாறு கலாச்சார இராஜதந்திரத்தை கொண்டு சீரமைப்பது என்பதை பற்றியும் கலந்துரையாடினார்கள்.
மூன்றாவதும் இறுதியுமான உரை ஆகஸ்ட் 14, 2022ல், MMCA இலங்கையின் பிரமோதா வீரசேகர, துணை எடுத்தாளுனர் மற்றும் பொது மக்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டினோ கொரேரா (நகைச்சுவையாளர்), கேஹான் ப்லோக் (நகைச்சுவையாளர்), கிஹான் டி சிக்கேரா (அரசியல் கேலிச்சித்திரம் வரைபவர்) மற்றும் ஷர்மினி பெரெய்ராவுடன் (கலை வரலாற்றாசிரியர் மற்றும் எடுத்தாளுனர்) கலைக்கும் நகைச்சுவைக்குமான உறவைப் பற்றி கலந்துரையாடினார்கள். இவ் உரையில் இலங்கையில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலவும் காலத்தில் உறுப்பினர்கள் அவர்களின் இணைய வழி தகவல்கள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கார்ட்டூன்கள் எவ்வாறு நகைச்சுவையை பயன்படுத்தியுள்ளனர் என்பதை கோடிட்டு காட்டியது. குழுவினர் இலங்கையின் கலை மற்றும் நகைச்சுவையின் வரலாறை நவீன ஓவியர்களான ஆப்ரேய் கொலெட் (1920-1992) போன்றோர் எவ்வாறு அவர்களின் கலை பற்றிய எதிர்மறையான கருத்துகளினால் 1950 மற்றும் 1960களில் தலைமறைவாக வாழ்ந்தனர் என்பதை குறிப்பிட்டு கலந்துரையாடினர்.
சஞ்சய செனரத், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் சிரேஷ்ட விற்பனை முகவர், “MMCA இலங்கையுடன் ஒன்றிணைவதால் அடுத்த தலைமுறை கலைஞர்கள் மற்றும் கலாரசிகர்களை உருவாக்கும் வாய்ப்பாக அமையும் என்பதை நாம் நம்புகிறோம். இவ் உரை தொடர்கள் சமூகத்த்திலுள்ள திறமை மற்றும் கற்பனை வளம் மிகுந்தோருக்கு தனித்துவமான மேடையை வழங்கும் என நம்புகிறோம். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியானது உள்ளூர் கலை மற்றும் கலைஞர்களை கடந்த காலத்தில் பல நிகழ்ச்சிகள் ஊடாக அனுசரித்து வந்தோம். MMCA இலங்கையுடன் ஒன்றிணைந்து இலங்கையின் சமகால கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதோடு உள்ளூர் கலைஞர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் நாம் ஆவலாகவுள்ளோம்.”
#SupportLocalArt: உரைத்தொடர் பதிப்பு இரண்டின் அனைத்து உரையாடல்களின் காணொலியையும் இவ் யூடியூப் சேனலில் youtube.com/channel/UCylvj8EIwenvXEjCdKQgZ9A அல்லது MMCA இலங்கையின் முகப்புத்தக பக்கத்தில் www.facebook.com/MMCAsrilanka காணலாம்.
புகைப்படம்: கமலா வாசுகி, வேனுரி பெரேரா மற்றும் ஷாமரா வெட்டிமுனி MMCA இலங்கையின் எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டியுடன் ஜூலை 24, 2022 நடைபெற்ற #SupportLocalArt Talk: The Power of Community நிகழ்ச்சி.
புகைப்படம்: கெல்லி மக்கார்த்தி, ஜார்ஜ் குக் மற்றும் ஆரேலியா கொலார்ட் MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரெய்ராவுடன் ஆகஸ்ட் 7, 2022 நடைபெற்ற #SupportLocalArt Talk: The Power of Diplomacy நிகச்சியின் போது.
புகைப்படம்: டினோ கொரேரா, கிஹான் டி சிக்கேரா, கெஹான் ப்லோக் மற்றும் ஷர்மினி பெரெய்ரா, துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகள் பிரமோதா வீரசேகரவுடன் MMCA இலங்கை ஆகஸ்ட் 14, 2022 நடாத்திய #SupportLocalArt Talk: The Power of Humour நிகழ்ச்சியின் போது.
– முடிவு–
01 ஜூலை 2022
தலைப்பு: Nations Trust வங்கி MMCA இலங்கையுடன் முக்கிய தாளாளராக இணைகிறது
நவீன மற்றும் சமகாலக் கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA Sri Lanka) Nations Trust வங்கியுடன் (NTB) புதிய உறவை தொடங்கியுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். 2022 முதல் 2025 வரையான மூன்று வருட காலப்பகுதியிற்கு இவ் வங்கி அருங்காட்சியகத்தின் முக்கிய தாளாளராகவிருக்கும்.
இப் புதிய பங்குரிமையை பற்றி ஷர்மினி பெரெய்ரா, தலைமை எடுத்தாளுனர், MMCA இலங்கை கூறுகையில், “MMCA அருங்காட்சியகத்தின் சார்பாக NTBயின் மூன்று வருட நிதியுதவிக்கு மிகுந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர்களின் நிதியுதவி MMCA இலங்கை அருங்காட்சியகத்தை மென்மேலும் வளர்ச்சியடைய உதவுகின்றது. அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதில் முக்கிய அங்கமாக புதிய தலைமுறை இளைஞர் யுவதிகளுக்கு அருங்காட்சியகத்தில் பணிபுரியும் வாய்ப்பையும் உருவாக்குகின்றோம். இளம் தலைமுறையின் முக்கிய குறிக்கோளான மாற்றம், சௌபாக்கியம் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கு இவ் அருங்காட்சியகம் நவீன மற்றும் சம கால கலைகளினூடாக கதை கூறுவதை மையமாகக் கொண்டு கண்காட்சி-வடிவமைப்பு, பொது நிகழ்ச்சிகள் மற்றும் இணைய வழி ஊடாட்டங்களை அளிக்கின்றது.” MMCA இலங்கை அருங்காட்சியகம் இலங்கையில் அருங்காட்சியகத்தினூடாக கற்றல் மற்றும் ஊடாட்டத்தை கட்டமைக்க முயல்கின்றது. கண்காட்சி மற்றும் கால் நிகழ்ச்சிகள் மாத்திரமல்லாது மூன்று மொழிகளிலும் இயங்கும் இலங்கையின் முதலாவது பொது மக்களுக்கான கலாச்சார முன்னெடுப்பாகும்.
இப் பங்குரிமையை பற்றி Nations Trust வங்கியின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி சஞ்சய செனரத், “இலங்கையில் கலை கலாசார விடயங்களை MMCA இலங்கையூடாக ஊக்குவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இவ் அருங்காட்சியகம் இலங்கையைச் சார்ந்த நவீன மற்றும் சமகால கலைஞர்களின் படைப்புகளை புதிய விதத்தில் காட்சிப்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கின்றது. எமது நிறுவன சமூக பொறுப்புகளை நிறைவேற்றி சமூகத்திற்கு நற் செயல்களை கொடுப்பது எமது கடமையாகும். “அடுத்த தலைமுறையை சக்திப்படுத்துவோம்” எனும் அடிப்படையில் இவ் அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.”
கடந்த 22 வருடங்களில், Nations Trust வங்கியானது பல்வேறு கலை-சார் நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுத்து தனியார் நிறுவனங்கள் எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக உள்ளது. வங்கியானது நீடிக்கக்கூடிய எதிர்காலத்திற்காக இப் புதிய முயற்சியை எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நீடிக்கக்கூடிய அபிவிருத்தி குறிக்கோள்களில் ஒன்றான தரமான கல்வி வழங்குதல், வங்கியின் முக்கிய தனியார் நிறுவன சமூக பொறுப்புகளில் ஒன்றாகும். இக் கூட்டமைப்பானது, நாட்டின் அடுத்த தலைமுறையின் அறிவு விருத்திக்கும், நவீன மற்றும் சமகால கலைத்துறையில் நிபுணர்களை உருவாக்குவற்கு வழிவகுக்கும்.
Nations Trust வங்கியின் தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளுக்கான தீர்வுகளை வழங்குகின்றது. செல்வ மேலாண்மை, வாழ்க்கைமுறை, அடுத்த தலைமுறை எனும் மூன்று முக்கிய பிரிவுகளை கருத்திற் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப சேவைகளை வழங்குகின்றது. ஒவ்வொரு பொருளும் சேவையும் பல்வேறு நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுனூடக அவர்களுக்கு “காலத்தை தாண்டிய மரபை” உருவாக்க வழிவகுக்கின்றோம். ஆக்கபூர்வமான முதலீடுகளுக்கு கலை ஆலோசனை சேவையை நாடுங்கள் https://www.nationstrust.com/personal/exclusive-memberships/private-banking.
இலங்கை MMCA கிரெஸ்கட் பூல்வார்ட், கொழும்பு 3ல் அமைந்துள்ளது. தினமும் மு.ப. 10 முதல் பி.ப. 6 வரையும், வெள்ளிக்கிழமைகளில் பி.ப. 8வரை திறந்திருக்கும். அருங்காட்சியகத்தில் நடைபெறும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இலவசமாகும். ‘சந்திப்புகள்’ கண்காட்சி Asian Hotels மற்றும் Properties PLC, ஐரோப்பிய ஒன்றியம், கலை முன்னெடுப்புகளுக்கான ஸ்தாபனம் மற்றும் John Keells ஸ்தாபகம். மேலதிக தகவல்களுக்கு, www.mmca-srilanka.org அல்லது www.facebook.com/mmcasrilanka மற்றும் Instagram www.instagram.com/mmcasrilanka/ நாடுங்கள்.
– முடிவு–
01 ஜூலை 2022
தலைப்பு: இலங்கையில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் உள்ள நிபுணர்களுக்கு பற்றிய ஆழமான பயிற்சித் தொடரை
நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (இலங்கை MMCA), கல்வியை முதன்மைப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகும். பொதுமக்கள், பாடசாலைகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் இன்பத்திற்காக, நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி, ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது. அருங்காட்சியகத்தின் பணிகள் அனைத்தையும் நிறைவேற்ற அவசியமான திறன்கள் மற்றும் அறிவைக் கொண்ட தொழில்ரீதியாகத் தகுதியான குழுவை உருவாக்குவது இலங்கை MMCAயின் முக்கிய பொறுப்புக்களில் ஒன்றாகும்.
இந்த சவாலை எதிர்கொள்ள, இலங்கையின் அருங்காட்சியகத் துறையில் தொழில்சார் மேம்பாட்டிற்கான நிலப்பரப்பைப் பற்றிய ஆய்வொன்றை, 2021ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தின் நிதியுதவியுடன், இலங்கை MMCA நடத்தியது. இவ்வாய்வின் போது, அருங்காட்சியகங்கள் பார்வையாளர்ககளுடன் தொடர்பு கொண்டு ஈடுபடுகின்ற விதத்தைக் குறித்து, பார்வையாளர்களின் அனுபவத்தின் அடிப்படையில், பல குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டன. கண்காட்சியின் வடிவமைப்பு, பொது நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு பார்வையாளர்களின் அனுபவத்திற்கு பங்களிக்கின்றன என்பதை இவ் ஆய்வு எடுத்து காட்டியது; ஆனால் அருங்காட்சியகங்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவோ, இவற்றில் முதலீடு செய்யவோ முன்வருவதில்லை. குறிப்பாக, இளைய நிபுணர்களிடையே திறன் குறைபாடுகள் மற்றும் அருங்காட்சியக தொழில்முறையில் சிறப்பறிவு இல்லாமை, போன்றவற்றுக்கு ஆய்வு எமது கவனத்தை ஈர்த்தது. அடுத்த கட்டமாக, இலங்கையில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலை தொகுப்பு சார்ந்த கலாச்சார நிறுவனங்களில் உள்ள நிபுணர்களுக்காக, ‘Museum Intensives’ (MI) என்ற ஆழ்ந்த பயிற்சி தொடரை இலங்கை MMCA ஏற்பாடு செய்கிறது. துறையில் ஆய்வு செய்யப்படாத தொகுதிகளில் அறிவு-பகிர்வு மற்றும் தொழில்முறை மேம்பாட்டை ஊக்குவிப்பதே இந்த MI பயிற்சி தொடரின் நோக்கமாகும்.
நெதர்லாந்து தூதரகத்தின் தொடர்ச்சியான நிதியுதவியின் ஆதரவினால், இலங்கை MMCAயானது இரண்டு முதன்மை பங்காளிகளுடன் நெதர்லாந்தின் கலாச்சார மரபு நிறுவனம் (Cultural Heritage Agency of the Netherlands-RCE), மற்றும் ரயின்வார்ட் கலைக்கூடம் (Reinwardt Academy) இணைந்து, முதலாவது MI பயிற்சியை நடாத்தவுள்ளது. இந்த MI பயிற்சியானது பார்வையாளர்களின் ஈடுபாட்டைக் கூட்டுவதில் கவனம் செலுத்தும். நெதர்லாந்தை மையமாகக் கொண்ட இவ்விரண்டு நிறுவனங்களும் சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருப்பதனால், அருங்காட்சியகப் பயிற்சியில் அனுபவத்தையும் சர்வதேச தரத்தையும் இந்த MI பயிற்சிகளுக்கு கொண்டு வந்து, அவற்றின் வடிவமைப்பு மற்றும் விநியோகத்திற்கான முக்கிய ஊக்கியாக மதிப்பூட்டுகின்றன. இவ்வாறாக, இலங்கை மற்றும் நெதர்லாந்தில் உள்ள தொழில்ரீதியான கற்றல் நிறுவனங்களுக்கிடையில் கலாச்சார அறிவு மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்தை MI பயிற்சிகள் பலப்படுத்தும். முன்னைய காலத்தில் இவ்வாறு நாடுகளும் நிறுவனங்களும் இணைந்து செயற்படும்போது, ஒரு வழி உரையாடல் முறையைப் பின்பற்றியிருந்த போதிலும், இப்போது பரஸ்பர பரிமாற்றத்திலேயே கவனம் செலுத்தப்படுகிறது.
“இந்த முன்மாதிரியான முயற்சியில் இலங்கை MMCAயுடன் கூட்டாளராக செயற்பட தூதரகம் மகிழ்ச்சி அடைவதோடு, பெருமிதம் கொள்கிறது. வரலாறு, பாரம்பரியம் மற்றும் சமகால, நவீன கலைப்படைப்புகள் நிறைந்த ஒரு சிறப்பான கலாச்சாரத்தை இலங்கை கொண்டுள்ளது. MI பயிற்சியானது, இந்த இரண்டையும் ஒன்றிணைப்பதுடன், இலங்கை மற்றும் நெதர்லாந்திலுள்ள தொழில்முறை நிபுணர்களை இவற்றில் ஈடுபடுத்தவும் உதவும். அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், மற்றையோரிடமிருந்து கற்றுக்கொள்ளவும், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும் இது ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும். இலங்கை அருங்காட்சியக நிபுணர்களின் திறனை வலுப்படுத்துவதன் மூலம், அவர்கள் தமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரை மேலும் ஈடுபடுத்துவதற்கும், இந்த செயற்திட்டம் உதவும்.”
— இலங்கையில் உள்ள நெதர்லாந்து இராச்சியத்துக்கான தூதுவர், டானியா கொன்கிறைப் அவர்கள்
தொழில்முறை நிபுணர்கள் இணைந்து, பிறரிடமிருந்து கற்றுக்கொண்டு, பொதுவான சவால்களுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக அறிவை மேம்படுத்தக்கூடிய, பாரம்பரிய சொத்துகளுக்கான ஒரு உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதே, சர்வதேச பாரம்பரிய சொத்துகளுக்கான ஒத்துழைப்புத் திட்டத்தின் நோக்கமாகும்.
“MI ஆனது, நீண்ட கால ஒத்துழைப்பின் தொடக்கமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
— என கலைத் தொகுப்புக்களுக்கு தலைவரான யோலண்டா எஸெண்டாம் குறிப்பிட்டார்
நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் கலை பல்கலைக்கழகமானது, உலகில் அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய சொத்துக்கள் சம்பந்தமான சர்வதேச துறையில் ஈடுபடும் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் இரண்டாவதாக உள்ளது. இப் பல்கலைக்கழகத்தில், கலாச்சார பாரம்பரிய சொத்துக்களுக்கான பீடத்திலேயே ரயின்வார்ட் கலைக்கூடம் அமைந்துள்ளது.
“நாம் இன்று வாழ்கின்ற காலங்களுக்கு ஏற்றவாறு ஒரு அருங்காட்சியகத்தை நடத்துவதில் இலங்கை MMCAயின் அணி சிறந்த நிபுணத்துவம் பெற்றுள்ளது. அவர்களின் அர்ப்பணிப்பு, அறிவு, உற்சாகம் ஆகியன மிகச் சிறப்பானவை. பயிற்சித் திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
— ரயின்வார்ட் கலைக்கூடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு முகாமையாளருமான ரூபன் ஸ்மிட்
முதலாவது ஆழ்ந்த அருங்காட்சியக பயிற்சியை (MI), கொழும்பில் (இலங்கை) 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“புதிதாக உருவெடுக்கும் ஒரு அருங்காட்சியகம் என்ற வகையில், நாம் எவ்வாறு எம்மைச் சூழ்ந்துள்ள சமூகங்களுக்குப் ஏற்புடையதாக இருக்கலாம் என்று பார்த்துக் கற்றுக்கொள்வதில் எங்களுடைய முதல் சில வருடங்களை செலவிட்டுள்ளோம். நாம் கற்றவற்றை கலாச்சாரத் துறையில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்கு இதுவே உகந்த நேரம் எனத் தோன்றுகிறது; இது தீவு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களுக்கு இடையே பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகளை ஊக்குவிக்கும். அருங்காட்சியகங்கள் பற்றி புதிய உரையாடல்களை உருவாக்குவது மட்டுமன்றி, அருங்காட்சியகத் துறையை ஒரு தொழில் வாய்ப்பாகக் கருதாத இளம் தொழில் நிபுணர்களுக்கு வாழ்க்கைப் பாதைகளை வழங்கும் இந்த முயற்சியை ஆதரித்ததற்காக, நெதர்லாந்து தூதரகத்திற்கு இலங்கை MMCA மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.”
— இலங்கை MMCAயின் தலைமைக் கண்காணிப்பாளர், ஷார்மினி பெரேரா கருத்து தெரிவிக்கையில்
இலங்கை MMCAயானது, தொகுக்கப்பட்ட கண்காட்சிகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை வழங்குவதன் மூலம், இலங்கையில் பொதுமக்கள் அணுகக்கூடிய முதல் மும்மொழி அரங்கமாகும். மேலதிக தகவலுக்கு, இணையதளம் மூலம் www.mmca-srilanka.org; அல்லது முகநூலில் (Facebook) www.facebook.com/mmcasrilanka; மற்றும் படவரியில் (Instagram) https://www.instagram.com/mmcasrilanka; இலங்கை MMCAஐப் பின்தொடரவும். ஆழ்ந்த அருங்காட்சியகப் பயிற்சி தொடரைப் (MI) பற்றிய தகவலுக்கு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.
– முடிவு–
01 ஜூன் 2022
தலைப்பு: பார்வையாளரை உள்ளடக்கிய கல்வி: நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகம்
நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் முதலாம் சுழற்சியை மே 22, 2022 நிறைவுற்றது. காட்சியில் வைக்கப்பட்டிருந்த கலைப்படைப்புகளை முன்னிறுத்தி மொத்தமாக 37 இலவச பொது நிகழ்ச்சிகள் எல்லா வயதினருக்கும் நடாத்தாப்பட்டது. இவ்வாறான நிகழ்ச்சிகள் அருங்காட்சியகத்தின் ஊழியர்களால் பொதுமக்கள் கலைப்படைப்புகளை நுண்ணியமாக அறிந்துகொள்ள சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டவையாகும்.
சமகால ஓவியரான பிரதீப் தலவத்த (பி. 1979) அவரின் படைப்பான ‘Athi Vishesha (Extra Special)’ (2008) பற்றி நட்பு மற்றும் காதல் சார்ந்த உரையுடன் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. தலவத்தவின் படைப்பானது ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி 1ல் ஜோர்ஜ் கீற்றின் (1901-1993), ‘The Friends’ (1982) ஓவியத்துடன் உரையாடலில் வைக்கப்பட்டது. வருகையாளர்களுக்கு ஓவிய வரலாற்றராசிரியரான த. சனாதனின் ஓவியர் ஆசை ராசைய்யாவின் ‘(வாழ்க்கை) கைவினைஞன்’ ((Life) Craftsman) (1970) படைப்பை பற்றிய உரையையும் இதே சுழற்சியில் கேட்கக் கூடியதாக இருந்தது. 2020ல் அவரின் இறப்புக்கு பின்னரான முதலாவது பொது உரையாடல் இதுவேவாகும். மாலக்க தலவத்த மற்றும் தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேரா ஜோர்ஜ் கீற் மற்றும் அவரின் கலையை தாக்கிய தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த விடயங்களை பற்றிய உரையாடலும் நிகழ்ந்தது. இவ் இலவச நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனைத்து இடங்களும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டன. இதனூடாக பொது மக்கள் கலைஞர்களுடன் உரையாடுவதற்கு மிகுந்த ஆவலாக உள்ளதை நாம் அறியக்கூடியதாகவுள்ளது.
காட்சிகள் மாறுவதால் கீற்றின் கலைப் பயணத்தைப் பற்றிய பொது நிகழ்வுகளும் மேலதிகமாக இடம்பெறும் ஏனெனில் ஒக்டோபர் 19, 2022 சுழற்சி 3ல் அவரின் படைப்புகள் மீண்டும் இடம்பெறும். MMCA இலங்கை காதல் மற்றும் நெருக்கத்தைப் பற்றிய 4 கவிதை வாசிப்புகளையும் ஒழுங்கு செய்தது. பூசத்தி லியனாராச்சி, சுரேகா சமரசேன, சௌம்ய சந்தருவன் மற்றும் அனர் காட்சி 2லிருந்த படைப்புகளை முன்னிறுத்தி அவர்களின் கவிதைகளை தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் வாசித்தனர். திறந்த மைக் நிகழ்ச்சியில் 16-21 வயதிற்கு இடைப்பட்ட இளம் மற்றும் புதிய கவிஞர்கள் அவர்களின் ‘நெருக்கம்’ பற்றிய கவிதைகளை வாசித்தனர். கவிதை நிகழ்ச்சிகள் 40 பங்குபெறுபவர்களை நவீன மற்றும் சமகால கலையுடன் கவிதையை ஒன்றிணைக்கும் புதிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.
துணை எடுத்தாளுனர் மற்றும் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பாளர் ப்ரமோதா வீரசேகர கூறியதாவது, ‘பார்வையாளர்கள் தனித்துவமான முறையில் கலைப் படைப்புகளுடன் ஈடுபடுவதற்கு ஏற்ற அனுபவங்களை நாம் உருவாக்க வேண்டும். இலங்கையில் அருங்காட்சியகத்திற்கு செல்லும் பொதுமக்களை உருவாக்க விரும்புகின்றோம். எமது குறிக்கோளானது இலவச மற்றும் சுலபமாக பெறக்கூடிய தொடர் நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை நீண்ட காலம் செய்வதேயாகும்.” அனைத்து நிகழ்ச்சிகளும் ஐரோப்பிய ஒன்றியம், கலை முன்னெடுப்புகளுக்கான ஸ்தாபனம் மற்றும் ஜான் கீல்ஸ் நிறுவனத்தால் அனுசரைக்குப்படுகின்றது. அவர்கள் இவ் இலவச நிகழ்ச்சிகளை நவீன மற்றும் சமகால கலைகள் சமூகத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய மாறுதல்களை முதலீடாக எண்ணி நிதியுதவி செய்கிறார்கள்.
MMCA இலங்கை பொது நிகழ்ச்சிகளில் சிறுவர்களுக்காக குறிப்பாக செயல்திறன்-சார்ந்த பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்துள்ளனர். Kiyawana Muddaraவின் பயிற்சிப்பட்டறை, இலங்கையின் வரலாற்றை முக்கிய தருணங்களில் வெளியிட்ட முத்திரைகளால் கற்றுக்கொள்ளும் பயிற்சிப்பட்டறையை ஒழுங்கு செய்தனர். அணி-சேரா இயக்கத்தைப் பற்றிய முத்திரைகள் ஜனவரி 8, 2023 வரை காட்சி 1ல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதே போன்று கலைஞர்களான சபீன் ஒமர் மற்றும் ஷாஹ்டியா ஜமால்டீன் துணி, தையல் மற்றும் பூந்தையல் மூலமாக கதை சொல்லும் முறை பற்றிய பயிற்சிப்பட்டறையை ஒழுங்கு செய்தனர். இப் பயிர்ச்சிப்பட்டறைக்கு சுழற்சி 1ல் காட்சிப்படுத்தப்பட்ட சுசிமான் நிர்மலவாசனின் ‘White Curtain and Women’ (2016) எனும் படைப்பை உந்துதுலாக எடுத்துக்கொண்டனர். ஷர்மி தவயோகராஜா, கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளின் நெறியாளர், பயிற்சிப்பட்டறைகளைப் பற்றி இவ்வாறு கூறினார், “பார்வையாளர்கள் இப் பயிற்சிப்பட்டறைகளில் வரலாறு முதல் கலை வரை புதிய விடயங்களை கற்றுக்கொள்வதற்காக பங்குபற்றுகிறார்கள். அதே சமயத்தில் நீண்ட நேர பணிக்கு பின்னர் ஓய்வெடுத்து இளைப்பாற, உதாரணத்திற்கு, தையல் மற்றும் பூந்தையல் போன்ற கலைகளை கற்றுக்கொள்ளவும் விரும்புகின்றனர். இவ்வாறான பயிற்சிப்பட்டறைகளூடாக அவர்களையும் அறியாமல் காட்சியிலுள்ள கலைப்படைப்புகளுடன் பார்வையாளர்கள் ஈடுபடுகிறார்கள்.
பொது நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது MMCA இலங்கை பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் நேரிடையாக தொடர்புகொண்டு மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு சுற்றுக்களை ஒழுங்கு செய்துள்ளது. ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் முதல் மூன்று மாதங்களில், 78 பாடசாலை மாணவர்கள் மற்றும் 116 பல்கலைக்கழக மாணவர்களை அருங்காட்சியகம் சுற்றுக்களை ஒழுங்கு செய்துள்ளது. எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டி MMCA இலங்கை எவ்வாறு “அருங்காட்சியகத்தின் கேலரிகளை வகுப்பறைகளாக, கற்றலுடன் நினைவுகூரல், நிற்றல் மற்றும் விளையாட்டுத்தனம்; மாணவர்களை பள்ளி முடிவடைந்த பின்னர் அவர்களின் நண்பர்களுடன் வருகை தரவைக்க” முனைகின்றது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாகவுள்ளார். MMCA இலங்கையின் குழுவானது கண்காட்சி எடுத்தாளுநர்களை மட்டுமல்லாது கல்வி, கற்றல் மற்றும் பயிற்சி எடுத்தாளுனர்களையும் கொண்டுள்ளது. மூன்று MMCA பணியாளர்கள் மாணவர்கள் எவ்வாறு அருங்காட்சியக பிரிவில் ஆர்வம் மற்றும் அப்பிரிவை தொழிலாக எடுத்துக்கொள்ள தேவையான ஊக்கத்தை எவ்வாறு வழங்குவது என பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நேரிடையாக கலந்துரையாடி வருகின்றனர்.
அருங்காட்சியகத்திற்கு உள் நுழையும் கட்டணம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் இலவசமாகும் அருங்காட்சியகத்தின் இணையதளமான www.MMCA-srilanka.org மற்றும் சமூக வலைத்தளங்களான Facebook www.facebook.com/MMCAsrilanka மற்றும் Instagram https://www.instagram.com/MMCAsrilanka/ ஊடாக நிகழ்வுகளை பற்றி அறிந்துகொள்ளலாம். கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு [email protected]. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள்.
– முடிவு–
01 பெப்ரவரி 2022
தலைப்பு: நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் ‘சந்திப்புகள்’ எனப் பெயரிடப்பட்ட தனது இரண்டாவது கண்காட்சியை அறிவிக்கிறது.
– ‘சந்திப்புகள்’ என்பது இலங்கையின் நவீன மற்றும் சமகாலக் கலைகளின் கண்காட்சியாகும். இது பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
– இந்தக் கண்காட்சியானது 1950கள் மற்றும் தற்போதுள்ள கலைப்படைப்புகளுக்கு இடையேயான ஆறு சந்திப்புகளை ஒன்றிணைப்பதாக அமையும்.
நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA Sri Lanka) ‘சந்திப்புகள்’ எனப் பெயரிடப்பட்ட தனது இரண்டாவது கண்காட்சியின் தொடக்கத் திகதியை அறிவித்துள்ளது. இக்கண்காட்சியானது அருங்காட்சியகத்தின் புதிய அமைவிடமாகிய கிரெஸ்கெட் போலெவர்ட்டில் (Crescat Boulevard) பிப்ரவரி 11 முதல் ஆகஸ்ட் 28, 2022 வரை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்திருக்கும். இக்கண்காட்சி ஜோர்ஜ் கீற், பிரதீப் தலவத்த, நெலுன் ஹரஸ்கம, சேனக்க சேனநாயக்க, அப்துல் ஹாலிக் அஜீஸ், மற்றும் ஜனனி குரே போன்ற பல்வேறு கலைஞர்களால் 1950களுக்கும் தற்காலத்திற்கும் இடையில் படைக்கப்பட்ட கலைப் படைப்புகள் இடையிலான மாற்றியமைக்கும் காட்சியமைப்பின் ஒரு தொடரான ஆறு சந்திப்புகளை ஒன்றிணைப்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
ஜோன் கீல்ஸ் மற்றும் ஜோர்ஜ் கீட் அறக்கட்டளையின் சேகரிப்பில் இருந்து பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் ஒரு பகுதியாகக் காட்சிப்படுத்தப்படும். நாட்டின் மிக முக்கியமான இரண்டு கலைச் சேகரிப்புகளிலிருந்து பல கலைப் படைப்புகளைப் பொதுமக்கள் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பை ‘சந்திப்புகள்’ கண்காட்சி வழங்குகிறது.
“எங்கள் இரண்டாவது கண்காட்சி தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த இரண்டு வருடங்கள் எதிர்பாராத பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நடமாட்ட முடக்கம் போன்றவற்றால் உலகம் முழுவதும் கண்காட்சி நிகழ்ச்சி நிரல்படுத்துகைகளுக்கு உகந்ததாக இருக்கவில்லை. ஆகவே இந்த ஆண்டை, 18 கலைஞர்களின் 46 கலைப்படைப்புகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சஞ்சிகைகள் மற்றும் புகைப்படங்களை உள்ளடக்கியதாகப் புதிதாக எடுத்தாளுகை செய்யப்பட்ட கண்காட்சியுடன் தொடங்குவதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கண்காட்சியானது மாற்றியமைக்கும் ஆறு காட்சிகளின் ஒரு தொடராக எடுத்தாளுகை செய்யப்பட்டுள்ளது, இங்கு ஒரு காட்சியமைப்பானது ஆறு மாதங்களுக்கும் ஐந்து காட்சியமைப்புகள் ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கும் பார்வையில் இருக்கும். ஒவ்வொரு ‘சந்திப்பும்’ முன்னையதிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு காட்சியமைப்பு மாற்றத்திற்கும் பார்வையாளர்களை மீளக் கண்காட்சிக்கு வருவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என MMCA Sri Lankaத்தின் தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேரா கூறினார்.
‘சந்திப்புகள்’ கண்காட்சிக் காலத்தின் போது, MMCA Sri Lanka செவ்வாய் முதல் ஞாயிறு வரை மு.ப. 10 முதல் பி.ப. 6 திறந்திருக்கும். அருங்காட்சியக நுழைவு மற்றும் அதன் பொது நிகழ்ச்சியின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பது இலவசம். பகல்வேளையில் திறந்திருக்கும் நேரங்களில் எளிதில் பார்க்க முடியாத பார்வையாளர்களுக்காக, வெள்ளிக்கிழமைகளில் பி.ப. 8 வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகம் பொது மற்றும் தனியார் போக்குவரத்து மூலம் எளிதாக அணுகத்தக்கதாய் போதுமான வாகன நிறுத்துமிட வசதியுடன் அதன் புதிய இடத்தில் அமைந்துள்ளது.
‘சந்திப்புகள்’ கண்காட்சியானது ஐரோப்பிய ஒன்றியம், கலை முயற்சிகளுக்கான அறக்கட்டளை (Foundation for Arts Initiatives), ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, மற்றும் Asian Hotels and Properties PLC என்பவற்றின் ஆதரவினைப் பெற்றது.
நாட்டிற்கான நவீன மற்றும் சமகால கலைகளின் அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பது மற்றும் முடிந்தவரை பரந்தளவான பொதுமக்களுக்கு நவீன, சமகாலக் கலை சார்ந்த கற்றல் மற்றும் ஈடுபாட்டை வளர்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு கலாச்சார முயற்சியே நவீன மற்றும் சமகாலக் கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் ஆகும். அதன் எடுத்தாளுகை செய்யப்பட்ட கண்காட்சிகள் மற்றும் கல்வித் திட்டங்களுடன் மும்மொழியில் பொது மக்கள் அணுகக்கூடிய இலங்கையின் முதலாவது அருங்காட்சியகம் இது ஆகும்.
மேலும் தகவலுக்கு, www.mmca-srilanka.org ஐப் பார்வையிடவும் அல்லது facebook.com/mmcasrilanka எனும் முகப்புத்தகம் மற்றும் instagram.com/mmcasrilanka/ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களைப் பின்தொடரவும்.
– முடிவு–
தலைப்பு: நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகமானது, புதிதாக வடிவமைக்கப்பட்ட பொது நிகழ்விடத்தில் திறந்துவைக்கப்படுகிறது
– நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கென அர்ப்பணிப்புடன் இயங்கும் இலங்கையின் முதலாவது அருங்காட்சியகம், கொழும்பு 03இல் அமைந்துள்ள Crescat Boulevardஇற்கு தனது இருப்பிடத்தை மாற்றவுள்ளது.
-நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம், பொதுமக்கள் மேலும் எளிதாக அணுகக்கூடிய அமைவிடமொன்றிற்கு நகர்கிறது.
நவீன-சமகால கலைகளை காட்சிப்படுத்துவதிலும் ஆய்வுசெய்வதிலும் சேகரிப்பதிலும் பேணுதலிலும் ஈடுபாடுகொண்ட, இந் நாட்டின் முதல் பொது அருங்காட்சியகமான நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம் (இலங்கை MMCA), நவம்பர் 2021இல் Crescat Boulevardஇற்கு அதன் இருப்பிடத்தை மாற்றியுள்ளது. இவ் இடமாற்றமானது. பொதுமக்களுக்கும் பாடசாலைகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எளிதாக அணுகக்கூடிய அருங்காட்சியகமாக இருக்கவேண்டும் என்ற அதன் நோக்கத்தினை நிறைவேற்றுவதாக அமைகிறது. இலங்கை MMCA ஆனது, 2019ம் ஆண்டு ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாக தொடங்கப்பட்டதுடன் உள்ளூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நிதியினைப் பெறுகிறது. அதன் முதலாவது கண்காட்சி 3500இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது. இதைவிட, நாடெங்கிலுமிருந்து 37 பாடசாலைகளதும் பல்கலைக்கழகங்களதும் குழுக்கள் வருகைதந்துள்ளனர். அக் கண்காட்சியின்போது, 165 இலவச பொது நிகழ்வுகள், 11 சிறுவர் பட்டறைகள், கலைஞர்களும் ஆசிரியர்களும் எடுத்தாளுநர்களும் பங்கேற்ற 12 மும்மொழி உரையாடல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை இவ் அருங்காட்சியகம் நடத்தியது.
இலங்கை MMCA செயற்குழுவின் தலைவர் அஜித் குணவர்தன இவ் அமைவிட மாற்றம் பற்றிக் கூறுகையில், “Crescat Boulevardஇற்கு தனது அமைவிடத்தை மாற்றுவதற்கு இலங்கை MMCA எடுத்த முடிவானது ஒரு மூலோபாயமாகும். உருவாக்கத்திலுள்ள ஓர் அருங்காட்சியகம் என்ற வகையில், பெருந்தொற்றுக்குப் பிந்தைய கொழும்பின் வளர்ச்சிக்கு இது ஒரு பெரும் மதிப்பினைக் கூட்டுகின்றது. எளிதில் அணுகக்கூடிய, அச்சுறுத்தலற்ற அமைவிடமொன்றினை Crescat வழங்குகிறது. இது இலங்கை MMCA இற்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது,” எனத் தெரிவித்தார்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சொத்துக் குழுமத்தின் பிரிவுத் தலைவர் நயன மாவில்மட, இலங்கை MMCA உடனான கூட்டாண்மை பற்றிப் பேசுகையில், “புதிதாக திருத்தியமைக்கப்பட்ட Crescat பேரங்காடியில் இலங்கை MMCAயிற்கு அமைவிடமளிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நகர மத்தியில் உள்ளதும், எளிதாக அணுகக்கூடியதுமான தனது அமைவிடத்தின் துணையுடன், இந்நாட்டின் சமகாலக் கலைகளை பரந்துபட்ட பார்வையாளர்களிடம் காட்சிப்படுத்துவதற்கு இலங்கை MMCAயிற்கு Crescat வாய்ப்பளிக்கும். இது கொழும்பின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு அவசியமான பண்பாட்டுரீதியான ஈர்ப்பினை வழங்குகின்றது. அத்துடன், எம் பேரங்காடிக்கு வருகை தருபவர்கள் தற்போது வழங்கப்படும் பல்திறப்பட்ட செயற்பாடுகளின் அனுபவத்தினையும் பெறமுடியும். சிந்தையைத்தூண்டும் அதன் கண்காட்சிகள், சிறுவர்களுக்கும் வளர்ந்தவர்களுக்குமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் எமது சமூகத்தின் செழுமை மிக்க வரலாற்றினையும் சமூக உரையாடல்களையும் காட்சிப்படுத்துவதில் இவ் அருங்காட்சியகத்துடன் கூட்டிணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.
இலங்கை MMCAயின் முதன்மை எடுத்தாளுநர் ஷர்மினி பெரேரா ஷர்மி பெரேரா, “இலங்கை MMCA, பேரங்காடி ஒன்றில் அமையும் முதல் அருங்காட்சியகமன்று. வரலாற்றில் இதுபோன்ற வணிகச் சூழல்களில்––குறிப்பாக, ஆசியா முழுவதும் யப்பான், இந்தியா, சீனா போன்ற நாடுகளில்––கலைக்கான வெளிகள் அமைந்திருக்கின்றன. நவீன மற்றும் சமகால கலைக்கான அருங்காட்சியகங்களுக்கு இதுவரைகாலமும் செல்லத் துணியாத பார்வையாளர்களையும் சென்றடைவதற்கான எண்ணற்ற வாய்ப்புக்களை இந்த புதிய அமைவிடம் எமக்கு வழங்குகிறது. தவறவிடக்கூடாத ஏராளமான நிகழ்ச்சிகள் அடுத்த ஆறு மாதகாலத்துக்கு அடுத்தடுத்து நிகழவுள்ளதால், அனைவரும் சமூக ஊடகங்களில் எம்மைப் பின்தொடர்வதை நாம் ஊக்குவிக்கிறோம். இந்நாட்டின் நவீன மற்றும் சமகால கலை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவது மட்டுமன்றி, கொழும்பு நகரின் தோற்றமதிப்பையும் மேம்படுத்தும் தனித்துவமான, அருங்காட்சியத் தரம் கொண்ட அனுபவத்தை மீண்டும் உருவாக்குவதே எமது இலக்காகும்,” என தெரிவித்தார்.
காலி வீதியிலிருந்தும் சிறீ உத்தரானந்த மாவத்தையிலிருந்தும் எளிதாக அணுகக்கூடிய இடத்தில், கொழும்பு 3 இன் மையப்பகுதியில் Crescat Boulevard அமைந்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 2022இல், Crescat Boulevardஇன் இரண்டாம்தளத்தில், 3800 சதுரஅடிப் பரப்பில், தனது இரண்டாவது கண்காட்சியினை இலங்கை MMCA திறந்துவைக்கவுள்ளது.
இலங்கை MMCA ஆனது, கற்றல், கண்டறிதல் ஆகிய மதிப்பீடுகளின் மீது உருவாக்கப்பட்டிருப்பதுடன் நாடு முழுவதிலும், அனைத்துலக அளவிலும் கடந்த கால, தற்கால, வாழும், பணியாற்றும் கலைஞர்களுடன் ஈடுபாட்டுடனும் உள்ளது. எடுத்தாளப்படும் கண்காட்சிகள், கல்விசார் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன், இவ் அருங்காட்சியகமானது, இவ்வகையில் பொதுமக்களால் அணுகக்கூடிய, இலங்கையின் முதலாவது மும்மொழி நிகழ்விடமாகும்.
– முடிவு–