சந்திப்புகள்

11 February 202219 March 2023

Encounters_1800x960px

ஒரு விடயத்திற்கும் இன்னொரு விடயத்திற்குமிடையேயான தற்செயலான சந்திப்பு, எமக்குப் பரீட்சயமான அல்லது பொதுவான ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா? அருகருகே வைக்கப்பட்ட இரண்டு கலைப்படைப்புகள், அவற்றைப் பற்றி புதிய விடயங்களை வெளிப்படுத்துமா?

இந்தக் கண்காட்சியானது, தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளின் கோர்வையாக, 1950 காலப்பகுதி தொடக்கம் தற்போது வரையான ஆறு படைப்புகளின் சந்திப்புகளை வெளிப்படுத்துகின்றது.

ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் ஜோர்ஜ் கீற் ஸ்தாபகத்தின் சேகரிப்புகளிலிருந்து வரையப்பட்ட, குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஓவியத்தை சூழ்ந்தும் அதற்குப் பதிலளிக்கும் வகையிலும் பல வகையான கலைப்படைப்புகளையும், குறுகிய வாழ்நாளை உடைய படைப்புகளையும் ஒவ்வொரு காட்சிப்படுத்தலும் வெளிப்படுத்துகின்றது. இந்த ஆறு படைப்புகளும் பரீட்சயமானதும் மற்றும் எதிர்பாராததற்கும் இடையேயான விளையாட்டுத்தனமானதும், சில சமயங்களில் விவாதத்திற்குரியதுமான ஒப்பீடுகளை முன்மொழிகின்றன.

ஒவ்வொரு காட்சிப்படுத்தல்களிலும் ஏற்படும் மாற்றங்களுக்கும் அமைய

விருந்தினர்கள் கண்காட்சிக்கு மீண்டும் அழைக்கப்படுகின்றனர்.

சுழற்சி 1
11 பெப்ரவரி–22 மே 2022

சுழற்சி 2
22 ஜூன்–13 நவம்பர் 2022

சுழற்சி 3
7 டிசம்பர் 2022 –19 மார்ச் 2023

‘சந்திப்புகள்,’ முதன்மை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேரா மற்றும் உதவி எடுத்தாளுனர் சந்தேவ் ஹன்டி ஆகியோரினால் எடுத்தாளுகை செய்யப்பட்டது.

கண்காட்சி மற்றும் கிராபிக் வடிவமைப்பு ஸ்டூடியோ எம்: எமில் மொலின் மற்றும் ஜொனத்தன் எட்வர்ட், ரூத் பெரேரா மற்றும் கேஷினி வெவேகமாவுடன்.

மொழிப்பெயர்ப்பு கௌமதி ஜெயவீர, கிருபாலினி ஸ்டீபன், மிரியம் நவீந்திரன், பூசதி லியனாராச்சி, சாம்பவி சிவாஜி மற்றும் ஷியால்னி ஜனார்த்தனன்.

We would like to thank all the artists, funders, and lenders for their generous support in making this exhibition possible.

Additional thanks to:

Afzal Farook
Anoja De J Seneviratne
Aravinda Dharmathilaka
C. Anjalendran
David Janszé Jr.
Dilko Samaranayake
Emile Molin
Jennifer Senanayake
Jithain Hathiramani
Jonathan Edward
Murfad Shariff
Niroshi Jayasekera
Padma Bandaranayake
Pathmanesan Prasanth
Prof. Hala Halim
Prof. Tariq Mehmood Ali
Prof. T. Sanathanan
Prof. Virinder S. Kalra
Rasika Silva
Ruvini Ekanayake and team at Crescat Boulevard
Shawnerine Abraham
Shayari de Silva
Stefan Winkler
Thisath Thoradeniya
Udaya Hewawasam

‘Encounters’ is generously supported by

Nations Trust Bank

Additional support provided by

Asian Hotels and Properties PLC
European Union
Fairfirst Insurance
Foundation for Arts Initiatives
Goethe Institut Sri Lanka
John Keells Foundation
MICD Associates
Studio M – CMB (Pvt) Ltd

‘நூறாயிரம் சிறிய கதைகள்’

13 டிசம்பர் 2019–16 ஆகஸ்ட் 2020

OHTST Gallery

புகழ்பெற்ற சமகால தமிழ் கவிஞர் சேரன், ஆம் ஆண்டில் வெளியிட்ட கவிதை ஒன்றில் அவர் விவரிக்கையில்–

“… நூறாயிரம் கதைகளைத் சுமந்து
உரம் பெற்ற பாலத்தை
இப்போது
உடைத்து விடுகிறது ஒரு கண்ணீர்த்துளி”

இக் கண்காட்சியானது, தன் தலைப்பையும் எடுத்தாளுகை உத்வேகத்தையும் கவிதையின் எண்ணற்ற கதைகளின் சுமை எவ்வாறு கற்பனைசெய்யப்பட்டுள்ளது என்பதிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இக் காட்சிப்படுத்தலானது கலையில் பௌதீககட்டமைப்பின் மறுகட்டமைப்பில் நாம் பெற்றுக்கொள்ளும் எண்ணில் அடங்காத அறிவை எவ்வாறு காட்சிப்படுத்துதல், நெறிப்படுத்துதல், பட்டியற்படுத்துதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் என்பதனை வழங்குகிறது. தூரநோக்கினடிப்படையில் இக் காட்சிப்படுத்தல், இலங்கையில் அதன் சமீபத்திய வரலாற்றில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியமாகவிருக்கும் குறிப்புகள், கதையாடல்கள், விவரிப்புகள், அத்தியாயங்களிற்கான கலைத்துவ வெளியீடுகளினை கலை வரலாற்றில் பதிவுசெய்யும் செயலினை வெளிப்படுத்துகிறது. இக் காட்சிப்படுத்தலினை நுணுக்கமாக நோக்கினால், பல தலைமுறைகளாக கலைப்படைப்புகளை படைத்துவரும் இலங்கை கலைத்துவ சமூகங்கள் மற்றும் அவர்கள் உருவாக்கிய கலைப்படைப்புகளின் சக்தியை உணர்த்தும் விதமாக காட்சிப்படுத்தலின் தலைப்பானது ‘ஒரு நூறாயிரம் சிறிய கதைகள் ’ என சூட்டப்பட்டுள்ளது. தலைப்புக்கு ஏற்றவாறு இக் காட்சிப்படுத்தலின் ஒவ்வொரு கலைப்படைப்பையும் ஒரு தனித்துவமான கதையை நிலைநிறுத்துவதோடு, ஒவ்வொருவருக்கும் ஒரு கதையைச் சொல்வதற்கு அல்லது ஒரு கதையை மீளச்சொல்வதற்கு அல்லது ஒரு கதையிலிருந்து வெளியேறுவதற்கும் அல்லது மௌனமாக இருப்பதற்குமான சாத்தியத்தினையும் திறனையும் பெற்றுள்ளது. இக் காட்சிப்படுத்தலானது முந்தைய தசாப்தங்களில் இடம்பெற்ற பல காட்சிப்படுத்தல்களுக்கும், அதற்காக உழைத்த பல்வேறுபட்ட கலைஞர்கள், எடுத்தாளுனர்கள், எழுத்தாளர்கள், கலை சேகரிப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் வருங்கால கலைஞர்களுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளது.

ஒரு நூறாயிரம் சிறிய கதைகள் ’ காட்சிப்படுத்தலானது முதல்முறையாக 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதி வரை டாக்காவில் ஷில்பகலா அக்கடமியில் நடைபெற்ற கலைநய உச்சிமாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

இக் கண்காட்சியை சாத்தியப்படுத்திய அனைத்து கலைஞர்களுக்கும் நிதியளித்தவர்களுக்கும் அவர்களது தாராள உதவிக்காக நன்றி கூற விரும்புகிறோம்.

முதன்மை புரவலர்கள்:

AOD Colombo (Pvt) Ltd
John Keells Foundation
MICD Associates

பின்வருவோரது தாராள மனதுடனான உதவியின்றி இக் கண்காட்சி சாத்தியப்பட்டிருக்காது:

ApiHappi
AzkoNobel
Colombo Innovation Tower
Elephant House
Fairfirst Insurance Limited
Geoffrey Bawa Trust
Gunaratne Offset (Pvt) Ltd
Idea Hub (Pvt) Ltd
M3Force
Photonics (Pvt) Ltd
Samdani Art Foundation
True Value Green Products (Pvt) Ltd
VK Enterprises (Pvt) Ltd
Wijeya Newspapers
Wineworld (Pvt) Ltd

Related Programs

Online

வாசிப்பு குழு

தாரிக் ஜசீலுடன் ‘மினெட் டி சில்வாவின் கட்டடக்கலை வழிமுறை’

Learn More

கலரி உரையாடல்

பேராசிரியர் சுமதி சிவமோகனுடன் ‘முரண்பாடு மற்றும் இடப்பெயர்வின் கதைகள்’

Learn More

கலரி உரையாடல்

ராதிகா ஹெட்டிஆராச்சி உடன் ‘போராட்டம், நினைவு, மற்றும் வெளியாள்தன்மை’

Learn More

கலரி உரையாடல்

ஹேமா ஷிரோணி

Learn More

Onsite

கலைஞர் சுற்றுலா

Learn More

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

ஷாமினி பெரேராவுடன்

Learn More

கேலரி உரையாடல்

பூபதி நளின் மற்றும் சுமுது அத்துகோரல ‘ஆவணப்படத்தை ஆராய்வோம்’

Learn More

கேலரி உரையாடல்

ஷாஹ்டியா ஜமால்தீன், சுமுது அத்துக்கோரல, மற்றும் சுசில் லமஹேவாவுடன் ;மினெட் டி சில்வாவை முன்னிறுத்தி உரையாடல்களை கட்டியெழுப்புவோம்

Learn More

For Kids

ஷர்மினி பெரெய்ராவுடன் சிறப்பு சிறுவர் தின எடுத்தாளுநர் சுற்றுலா

Learn More

சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி

‘எனது மகிழ்ச்சி இடம்’ (9 முதல் 12 வயது வரை)

Learn More

சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி

‘கடுகளினால் உருவாக்கும் உருவங்கள்’ (6 முதல் 8 வரை)

Learn More

சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி

‘மன வரைபடங்கள்’ (9 வயது முதல் 12 வரை)

Learn More

For Educators

பயிற்சிப்பட்டறை

ஷேனுக்கா கொரையாவுடன் ‘காமிக் வரைதல் மற்றும் கதை உள்ள’ (வயதிற்கு மேற்பட்டோர்)

Learn More

பயிற்சிப்பட்டறை

ஸைனப் ஹுதா உடன் ‘Zine உருவாக்கமும் கலை இதழிலும்’ (16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு)

Learn More

பயிற்சிப்பட்டறை

ஆதி ஜெயசீலனுடன் ‘என் பாதுகாப்பான புகலிடம்’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)

Learn More

பயிற்சிப்பட்டறை

சாம்பவி சிவாஜியுடன் ‘இலக்கிய மொழிப்பெயர்ப்பு’ (16 வயதிற்கு மேற்பட்டோர்

Learn More

Upcoming Programmes

April 06

பயிற்சிப்பட்டறை

கன்யா டி அல்மெய்டா உடன் ‘வீட்டுக்கு எழுதல்’ (18 வயதிற்கு மேற்பட்டோர்)

Learn More

March 30

தமிழ் மொழியில் கண்காட்சி சுற்றுப்பயணம்

Learn More

March 23

கலைஞர் சுற்றுலா

Learn More

Support Us

Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.

The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us

Join Us